காரைக்காலில் திருநங்கை காதலியுடன் சேர்ந்து உயிரைமாய்த்துக்கொண்ட இளைஞர்

காரைக்காலில் திருநங்கையைக் காதலித்த இளைஞரும், திருநங்கையும் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்காலில் திருநங்கை காதலியுடன் சேர்ந்து உயிரைமாய்த்துக்கொண்ட இளைஞர்
கோப்புப்படம்.
  • Share this:
ஆணும் பெண்ணும் காதலித்து அவர்களுக்குள் ஏதேனும் பிரச்னையோ அல்லது ஒன்றுசேர முடியாத நிலையோ ஏற்பட்டால் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நடந்து வந்தன. ஆனால், காரைக்காலில் திருநங்கையைக் காதலித்த இளைஞரும், திருநங்கையும் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த திலீப் (26) அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் டெக்னீஷியனாகப் பணியாற்றி வருகிறார். அவருக்கு, கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருநங்கையாக மாறி, காரைக்கால் நிரவி பகுதியில் வசித்துவரும் சிவானி (30) மீது காதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் கடந்த 6 மாதங்களாகக் காதலித்து வந்துள்ள நிலையில், திலிப்பின் உறவினர்கள் இருவரது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன், திலிப்பை தொடர்ந்து கண்டித்தும் வந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், காரைக்கால் அடுத்த ஒடுதுறை பகுதியில் வாடகை வீட்டில் இருவரும் வசித்து வந்துள்ளனர்.


Also see:

திருநங்கை சிவானி மீது அதீத காதல் கொண்ட திலீப், அவரை வெளியே அழைத்துச் செல்வதையும் காரைக்காலில் வளம் வருவதையும் வாடிக்கையாகக் கொண்டு இருந்துள்ளார். ஏற்கனவே திலிப் வீட்டில் திருநங்கையைக் காதலித்ததற்கு எதிர்ப்பு வலுத்து வந்த நிலையில், சிவானி மற்றும் திலீப் ஆகியோருக்கு இடையே கடந்த சில தினங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று இரவு இருவருக்கும் தகராறு முற்றி, சிவானி தனது வீட்டிற்கு ஃபோன் செய்து நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்று கூறி அழுது கதறியுள்ளார். தொடர்ந்து, இன்று காலை வழக்கமாக வீட்டுக் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் வீட்டு உரிமையாளர் நிரவி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நிரவி காவல் நிலைய உதவி ஆய்வாளர், சக்திவேல் பூட்டியிருந்த வீட்டை உடைத்துப் பார்த்தபோது, திருநங்கை சிவானி மற்றும் காதலன் திலீப் ஆகிய இருவரும் தனித்தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. பின்னர் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் காரைக்கால் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருவரது உயிரிழப்பு குறித்து திருநங்கை சிவானியின் சகோதரி, சிவகாமி சுந்தரி நிரவி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தனித்தனி அறையில் இருவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதால், திலீப்பைக் கொலை செய்துவிட்டு திருநங்கை சிவானி தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது திலீப் வீட்டின் தொடர் எதிர்ப்பால் திருமணம் செய்துகொள்ள முடியாது என்ற அச்சத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா போன்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
First published: June 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading