புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை ப்ராண்டியர் லைப் லைன் மருத்துவமனையுடன் இணைந்து இருதய அறுவை சிகிச்சை துவக்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் 234 இருதய அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்து வைக்கப்பட்டன. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இருதய அறுவை சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்த அறுவைச் சிகிச்சைகள் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. அதற்காக இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ப்ராண்டியர் லைஃப் மருத்துவமனைகள் ஒப்பந்தம் மீண்டும் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் இன்று மாலை கையெழுத்தானது. ப்ராண்டியர் லைப் லைன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் செரியன், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் அருண் ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர்.
இதுகுறித்து முதல்வர் ரங்கசாமி கூறுகையில், கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட இருதய அறுவை சிகிச்சைகள் தற்போது மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இதுவரை 234 பேருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அனைத்து சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஒரு வாரத்துக்கு 6 முதல் 10 பேருக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
புதுச்சேரியில் உள்ள மருத்துவர்களும், சென்னையிலுள்ள மருத்துவர்களும் காணொளி மூலம் பேசி, நோயாளிகளுக்கு எந்த முறையில் அறுவை சிகிச்சை செய்வது ஆலோசனை செய்யப்படும். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் சென்னை செல்லாமலே புதுச்சேரியில் தரமான இருதய சிகிச்சை பெற முடியும்.
சுகாதாரத்துறை மூலம் புதுச்சேரியில் மக்களுக்கு தரமான சுகாதாரமான சிகிச்சையை அரசு அளித்து வருகிறது. இதனை ஏழை எளிய மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதேவேளையில் கொரோனா நோயை ஒழிக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் . இதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
strong>Follow @ Google News:
கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் வாசுதேவன், மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், இருதயவியல் துறை டாக்டர் ஆனந்தராஜா, மணிவர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.