புதுச்சேரியில் பெண்ணிடம் பிரான்சு நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நைஜீரியா நாட்டை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்லின் மேரி இவர் சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரது தொலைபேசிக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தன்னை பிரெஞ்சு நாட்டு தூதரக அதிகாரி என்று அறிமுகபடுத்தி கொண்டு பிரான்ஸ் விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு தனது வங்கி கணக்கில் 5 லட்சத்தி 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனை நம்பிய ஜாஸ்லின் மேரி அந்த போலி தூதரக அதிகாரியின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி உள்ளார். பணத்தை பெற்று கொண்ட அந்த நபர் வேலை வாங்கி தராமல் தனது செல்போனை அனைத்து வைத்துவிட்டு மாயம் ஆகியுள்ளார். நடந்தவை குறித்து ஜாஸ்லின் மேரி புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரின் தொலைபேசி எண் மற்றும் வங்கி கணக்கை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் ஜாஸ்லின் மேரியை ஏமாற்றியது நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் என போலீசார்க்கு தெரியவந்ததை அடுத்து பெங்களுர் எலஹன்கா பகுதியில் பதுங்கி இருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த டைவோ அத்வேலை (31) கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.
Also read: புதுச்சேரியில் கர்ப்பிணிகளுக்கு முதல்முறையாக கொரோனா தடுப்பூசி முகாம்!
இதனை தொடர்ந்து வருகின்ற திங்கட்கிழமை அன்று டைவோ அத்வேலை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் க்ரைம் போலிசார் திட்டமிட்டுள்ளதாகவும், அவரை காவலில் எடுத்து விசாரணை செய்த பிறகே அவர் மோசடி செய்த பணம் குறித்தும், இதே போல் அவர் வேறு யாரிடமாவது பண மோசடியில் ஈடுப்பட்டுள்ளாரா என்பது குறித்தும் தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.