அரசின் கொரோனா பணிகளை ஆளுநர் தடுக்கிறார் - புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆவேசம்

புதுவை ஆளுநர் கிரண்பேடி தனிச்சையாக அறிவிப்புகளை வெளியிட்டு அரசின் நடவடிக்கைகளைத் தடுப்பதாக மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

அரசின் கொரோனா பணிகளை ஆளுநர் தடுக்கிறார் - புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆவேசம்
கிரண்பேடி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்.
  • Share this:
சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியதாவது, புதுச்சேரியில் மேலும் 17 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய நிலவரப்படி பாதிப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தம் 383, அவர்களுள் சிகிச்சை பெறுவோர் 226 பேர், குணமடைந்து வீடு திரும்பியுள்ளோர் எண்ணிக்கை 149.

கடந்த 85 நாட்களாய் முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் கொரோனாவிற்கு எதிரான பல ஆய்வு, கூட்டம் என நடத்தி நோயைத் தடுக்க பாடுபடுகிறோம். ஆனால் 70 நாட்களாய் வெளியே வராமல் தூங்கிவிட்டு, கடந்த 15 நாட்களாய் இரவு 7 மணிக்கு தனிச்சையாக அறிவிப்புகளை வெளியிட்டு அரசு நடவடிக்கைகளைத் தடுக்கிறார். கிரண்பேடிக்கு விருப்பம் இருந்தால் அரசு நடத்தும் கூட்டங்களில் பங்கேற்று கருத்துக் கூறலாம் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

Also see:அவர் மேலும் கூறுகையில், புதுச்சேரியில் மாஸ்க் அணியாத பொது மக்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதே மாஸ்க்கைத் தயாரிக்கும் நிறுவனத்தால் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு நிறுவனத்தின் அலட்சியமே காரணம். இவர்களால் இன்னும் நோய்ப் பரவும் அபாயம் உள்ளது. அந்த நிறுவனத்தின்  மீது நடவடிக்கை எடுத்தால் எதிர்காலத்தில் யாரும் இப்படிப்பட்ட தவறைச் செய்ய முடியாது என்றார்.
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading