கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் திடீர் ஆய்வு: அதிகாரிகளைக் கடுமையாக சாடிய கிரண்பேடி

இதுகுறித்து அங்கிருந்த அதிகாரிகள் தினமும் அரசுக்கும் சுகாதார மையங்களுக்கும் அளிக்கும் தகவல்களை நகலெடுத்து கொடுத்துள்ளனர்.

கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் திடீர் ஆய்வு: அதிகாரிகளைக் கடுமையாக சாடிய கிரண்பேடி
கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் கிரண்பேடி
  • Share this:
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்ற அவர், அங்கிருந்த அதிகாரிகளிடம் கொரோனா குறித்து தனக்கு ஒரு வாரகாலமாக தகவல்கள் தராதது ஏன் எனவும் மேலும் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்துள்ளீர்களா..? அனைத்து சுகாதார நிலையங்களுக்கு தேவையான உத்தரவுகளை  தினமும் அளிக்கிறீர்களா..? என அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து அங்கிருந்த அதிகாரிகள் தினமும் அரசுக்கும் சுகாதார மையங்களுக்கும் அளிக்கும் தகவல்களை நகலெடுத்து கொடுத்துள்ளனர். எனினும் கட்டுப்பாட்டு மையத்தின் பொறுப்பாளரான துணை இயக்குனர் ரகுநாதன் அளித்த பதில் திருப்தி இல்லாததால் "செய்யும் தொழிலுக்கு நேர்மையாக இருங்கள்.. மக்களுக்கு உண்மையாக பணியாற்றுங்கள்" என ஆவேசமாக கூறியுள்ளார்.

ஒரு மணி நேரமாக ஆளுநர் அதிகாரிகளை கடுமையாக திட்டியது அதிகாரிகள் மட்டத்திலும் சுகாதார ஊழியர்கள் மட்டத்திலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
First published: July 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading