நாளை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் காரைக்கால் மீனவர்கள்

நாளை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல காரைக்கால் மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் காரைக்கால் மீனவர்கள்
கோப்புப்படம்
  • Share this:
தடை காலத்தைத் தளர்த்தி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லலாம் என மத்திய அரசு அறிவுறுத்தி இருந்த நிலையிலும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடந்த மூன்று மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் காரைக்கால் மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு, பட்டினச்சேரி, மண்டபத்தா உள்ளிட்ட 11 கிராம மீனவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி நாளை முதல் (22.06.2020) விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது எனவும் சமூக இடைவெளியைப் பின்பற்றி மீன் விற்பனை செய்வது, மத்திய அரசின் பாதுகாப்பு அம்சங்களைக் கடைபிடிப்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Also see:கடந்த மூன்று மாத காலமாக கடலுக்குச் செல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தங்களுக்கு புதுச்சேரி மாநில அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள மீனவர்கள், வெளிமாநில வியாபாரிகளும் வெளிமாவட்ட வியாபாரிகளும் காரைக்காலில் அமைந்துள்ள துறைமுகத்தில் மீன்களை வாங்கிச் செல்வதற்கு மத்திய அரசின் பாதுகாப்பு அம்சங்களைக் கடைபிடிக்க வேண்டும் என தங்கள் கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
First published: June 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading