புதுச்சேரியில், லாஸ்பேட்டை முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இன்று இணைய இருப்பதாகவும், அவருக்கு லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு அளிக்க முன்வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
புதுச்சேரியில் அரசியல் அதிரடிகளுக்கு எப்போதும் பஞ்சம் இருப்பதில்லை என்னும் அளவில் அரசியல் களம் பரபரப்பாகக் காணப்படுவது வழக்கம். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நமச்சிவயாயம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து சில, காங்கரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. தற்போது, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கின்றது. அம்மாநில துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார்.
Must Read : நாடும் மக்களும் நன்றாக வாழ, நாம் தமிழர் ஆள வேண்டும் - சீமான்
புதுச்சரி சட்டமன்ற தேர்தல், தமிழகத்தைப் போலவே ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி இருக்கின்றது. இந்நிலையில், லாஸ்பேட்டை முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இன்று இணைய இருப்பதாகவும், அவருக்கு காங்கிரஸ் சார்பில், லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.