சிசிடிவி பொருத்தப்பட்ட பிறகு சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளன - டி.ஐ.ஜி. எழிலரசன் தகவல்

சிசிடிவி பொருத்தப்பட்ட பிறகு சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளன என்று டி.ஐ.ஜி. எழிலரசன் தெரிவித்தார்.

சிசிடிவி பொருத்தப்பட்ட பிறகு சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளன - டி.ஐ.ஜி. எழிலரசன் தகவல்
சிசிடிவி கேமராக்கள் (கோப்புப்படம்)
  • News18 Tamil
  • Last Updated: September 26, 2020, 7:38 PM IST
  • Share this:
புதுச்சேரி அருகேயுள்ள சர்வதேச நகரமான ஆரோவில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. இங்கு மூவாயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். இதையொட்டி முந்திரிக் காடுகள் அதிகமுள்ள குயிலாப்பாளையம், இடையன்சாவடி, பொம்மையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு, கொலை சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன.

இப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், குயிலாப்பாளையத்திலிருந்து பொம்மையார்பாளையம் செல்லும் சாலையில் முக்கிய சந்திப்பில், ராஜேஸ்வரி கலைக்கல்லூரி செல்லும் சந்திப்பில் பிரெஞ்சு மாடலில், புதிய போலீஸ் பூத் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு பகுதிகளிலும் கண்காணிப்பு கேமிரா, குடிநீர், கருங்கற்களால் உருவாக்கப்பட்ட இருக்கைகள் என அழகுபடுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி சோலார் மின் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாலை நடந்தது.Also read: கள்ளக்காதலை கண்டித்த கணவனை கொன்ற மனைவி - பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு நாடகம்


அந்த விழாவில் விழுப்புரம் மாவட்ட டி.ஐ.ஜி எழிலரசன் பங்கேற்று, போலீஸ் பூத், கண்காணிப்பு கேமிரா மற்றும் உயர் கோபுர மின் விளக்கை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகத்திலேயே 3 லட்சத்திற்கும் அதிகமான கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்ட பெருநகரமாக சென்னை விளங்குகிறது. இதனால் அங்கு குற்றங்கள் குறைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அரோவில் பகுதியிலும் நிறைய கண்காணாப்பு கேமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் எனவும் டி.ஐ.ஜி. எழிலரசன் வலியுறுத்தினார்.

விழாவில் போலீஸ் பூத் அருகில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன், டி.எஸ்.பி அஜய் தங்கம்,  இன்ஸ்பெக்டர்கள் மைக்கேல் இருதயராஜ், சரவணன், பாஸ்கர் மற்றும் ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் சீனுவாசன், ராஜேஸ்வரி மகளிர் கல்லூரி முதல்வர் சிவக்குமார், வானூர் வீட்டு வசதி சங்கத் தலைவர் முருகன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
First published: September 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading