இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளது - பிரதமர் மோடி உறுதி

இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளது - பிரதமர் மோடி உறுதி
நரேந்திர மோடி
  • Share this:
இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளது. சரியான நேரத்தில் ஊரடங்கு கொண்டுவரப்பட்டதால் இந்தியாவில் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர், ‘இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாக உள்ளது. சரியான நேரத்தில் ஊரடங்கு கொண்டுவரப்பட்டதன் மூலம் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.

மழைக்காலம் தொடங்கவுள்ள சூழலில் பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். பொதுமுடக்கத் தளர்வுகளால் பொதுமக்கள் பலர் முகக்கவசங்கள் அணியாமல் இருக்கின்றனர். சிறிய தவறுக்குக்கூட மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடலாம். பிறநாடுகளுடன் ஒப்பிடும்போது நம்நாடு கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டுள்ளது. பொதுமுடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை. 80 கோடி மக்களுக்கு இலவச அரிசி/ கோதுமை வழங்கப்பட்டுள்ளது.


தற்போது வழங்கப்பட்டுவரும் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை நவம்பர் மாதம் இறுதிவரை இலவசமாக வழங்கப்படும். அரசின் விதிமுறைகளை மீறுவோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். நாட்டில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக் கூடாது. ஊரடங்கு காலத்தில் ஒரு பட்டினிச் சாவு கூட கிடையாது.


பொதுமுடக்கத்தின் இரண்டாவது கட்டமான unlock 2.0 தொடங்கிவிட்டது. 3 மாதத்தில் 31 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி பணமாக வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் முதல் சாமானியர் வரை நமது நாட்டில் அனைவருக்கும் ஒரே விதிதான். 18 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

 
First published: June 30, 2020, 4:13 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading