நம் எல்லையைக் குறிவைத்தவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது - மோடி பெருமிதம்

இந்திய பகுதிகளைக் குறிவைத்தவர்களுக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர் என்று மான்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நம் எல்லையைக் குறிவைத்தவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது - மோடி பெருமிதம்
நரேந்திர மோடி
  • Share this:
மான்கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘இந்தியா நட்புறவை எப்படி கையாள வேண்டும் என்பது தெரியும். அதேநேரத்தில் நம்முடைய எதிரிகள் மீது கண்வைத்துக்கொள்ளவும் செய்யும். தேவைகள் ஏற்பட்டால் பதிலடி கொடுக்கும். தங்களுடைய தாய் நிலத்துக்கு எந்த ஒரு ஆபத்தையும் வரவிடமாட்டர்கள் என்பதை நம்முடைய தைரியான ராணுவ வீரர்கள் நிரூபித்துள்ளனர். எந்த விதமான சவால்கள் நமக்கு வந்தாலும், இந்த ஆண்டைக் குறைசொல்லக்கூடாது. அனைத்துவிதமான சவால்களையும் வெற்றிகரமாகக் கடந்து இந்திய வரலாற்றில் பலர் இடம் பிடித்துள்ளார்கள்.

ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ள இந்த காலத்தில்தான் நாம் முழு கவனமாக இருக்கவேண்டும். நீங்கள் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல், மற்ற தடுப்பு நடவடிக்கைகளைக் பின்பற்றவில்லையென்றால், நீங்கள் உங்களுடைய உயிரையும் மற்றவர்களுடைய உயிரையும் ஆபத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறீர்கள்.

இந்த நாட்டு மக்கள் யாரும் கவனக் குறைவாக இருக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். வீரம்மிகுந்த நமது ராணுவத்துக்கு இந்தியா தலைவணங்குகிறது. ராணுவம்தான் இந்தியாவைப் பாதுகாப்பாக வைத்துள்ளது. அவர்களின் வீரம் எப்போதும் நினைவில் கொள்ளப்படும்.நம்முடைய தேசத்தை வலிமையாகவும், தற்சார்பு உடையதாகவும் மாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன. இதுதான், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்’ என்று தெரிவித்தார்.
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading