ராஜஸ்தானில் படையெடுக்கும் பாலைவன வெட்டுக் கிளிகள்...!

ராஜஸ்தானில் மீண்டும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு விவசாயிகளை பீதிக்கு உள்ளாக்கியுள்ளது

ராஜஸ்தானில் படையெடுக்கும் பாலைவன வெட்டுக் கிளிகள்...!
வெட்டுக்கிளிகள்
  • Share this:
பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானுக்குள் பாலைவன வெட்டுக் கிளிகள் படையெடுத்துள்ளதால் அவற்றை அழிக்கும் பணிகளை அம்மாநில அரசு தீவிரமாக செய்து வருகிறது.

பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய வெட்டுக்கிளிகள் நேற்று ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்திற்குட்பட்ட அனுப்கர் நகருக்குள் புகுந்துள்ளன.

Also read... தண்டையார்பேட்டையில் 5 ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று - சென்னை அப்டேட்


ஐந்து சதுர கிலோ மீட்டர் அடர்த்தியுள்ள இந்த வெட்டுக் கிளிகள் கூட்டம் அங்குள்ள பயிர்களை அழித்து வருகின்றன. அண்டை மாவட்டங்களான பிகானீர், ஜலோர், பார்மர், ஜெய்சல்மர் மாவட்டங்களில் வெட்டுக் கிளிகள் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வெட்டுக்கிளைகளை விரட்ட உலக வங்கி நிதி உதவியுடன்411 டிராக்டர்களில் பவர் ஸ்ப்ரேயர் மூலம் மருந்து தெளிக்கவும், இதற்காக 53,000 லிட்டர் மருந்து கொள்முதல் செய்யவும் வேளாண் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading