மாநிலங்களவை தேர்தல் வெற்றி நிலவரம்: பாஜக கூட்டணியின் பலம் என்ன?

மாநிலங்களவை தேர்தலில் பாஜக 8 இடங்களையும், காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலா 4 இடங்களையும் கைப்பற்றின. இதன் மூலம் மாநிலங்களவையில் பாஜக கூட்டணியின் பலம் 101- ஆக அதிகரித்துள்ளது.

மாநிலங்களவை தேர்தல் வெற்றி நிலவரம்: பாஜக கூட்டணியின் பலம் என்ன?
ராஜ்யசபா
  • Share this:
நாடு முழுவதும் காலியாக இருந்த 19 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், அதிகபட்சமாக பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிகள் தலா 4 இடங்களைக் கைப்பற்றின.

மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் சுமேர் சிங் சோலங்கி ஆகியோர் பாஜக சார்பிலும், திக் விஜய் சிங் காங்கிரஸ் சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் கே.சி வேணுகோபால், நிரஜ் டாங்கி ஆகியோரும், பாஜக தரப்பில் ராஜேந்திர கெலாட்டும் மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ளனர்.

குஜராத்தில் 4 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் பாஜக மூன்று இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் கைப்பற்றியது. ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 பேரும் வெற்றி பெற்றனர்.


ஜார்கண்டில் ஜார்கண்ட் முக்தி மோட்சா கட்சி தலைவர் சிபுசோரனும், பாஜகவில் தீபக் பிரகாஷும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரசியல் குழப்பம் நிலவி வரும் மணிப்பூரில் ஓரிடத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் 28 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். மேகாலயா, மிசோரம் மாநிலங்களில் ஆளும் கட்சிகள் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன.

மாநிலங்களவைக்கு பாஜக கூட்டணி சார்பில் புதிதாக 11 உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலங்களவையில் பாஜக கூட்டணி பலம் 101-ஆக அதிகரித்துள்ளது. அதில், பாஜக மட்டும் 86 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
காங்கிரஸ் கூட்டணிக்கு 65 உறுப்பினர்கள் ஆதரவு மட்டும் உள்ளது. மாநலங்களவையில் மொத்தமுள்ள 245 இடங்களில் பெரும்பான்மைக்கு 123 இடங்கள் தேவைப்படும் நிலையில், பிஜு ஜனதா தளம், அதிமுக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆதரவளித்தால் பாஜக கூட்டணி அரசால் முக்கிய மசோதாக்களை எளிதில் நிறைவேற்ற முடியும்.

மேலும் படிக்க...

சூரிய கிரகணம்: திருப்பதி கோயில் சாத்தப்பட்டது- நடை திறப்பு எப்போது?

அதேநேரம் இந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், சிபுசோரன், எச்.டி தேவகவுடா உள்ளிட்டோர் தேர்வாகியுள்ளதால் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் பலமும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: June 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading