நவம்பர் மாதம் வரை ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு

அவரது பிறந்த நாள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் வியயராஜே உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

 • Share this:
  நவம்பர் மாதம் வரை ரேஷன் கடை மூலம் இலவசமாக ரேஷன்பொருள்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர், ‘நாட்டில் சட்டத்தைவிட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. அனைவரும் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும். அரசின் விதிமுறைகளை மீறுவோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை.

  நாட்டில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது. கரீப் கல்யான் திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் வரை இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும். 5 கிலோ அரிசி அல்லது கோதுமையுடன் ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும். 80 கோடி மக்களை ரேஷன் பொருள்கள் சென்றடையும்.

  இந்தத் திட்டத்தின் காரணமாக அரசுக்கு கூடுதலாக 90 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். ஏழை மக்களுக்காக 1.75 லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: