மனைவியையும் மாமியாரையும் கொன்று தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

பெங்களூருவில் மனைவியைக் கொன்றுவிட்டு கொல்கத்தா சென்ற நபர், மாமியாரையும் சுட்டுக்கொன்று தற்கொலை செய்துள்ளார்.

மனைவியையும் மாமியாரையும் கொன்று தற்கொலை செய்துகொண்ட இளைஞர்
கோப்புப் படம்
  • Share this:
கொல்கத்தாவைச் சேர்ந்த 45 வயது அமித் அகர்வால், தனது மனைவி ஷில்பியுடன் பெங்களூருவில் வாழ்ந்து வந்தார். குடும்பத் தகராறில் ஷில்பியைக் கொன்ற அமித், விமானத்தில் கொல்கத்தா சென்று, மாமியார் லலிதா தன்தானியாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அத்துடன் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து மேற்குவங்கம் மற்றும் கர்நாடக போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்கொலை கடிதத்தில் மனைவியைக் கொன்றுவிட்டதாக அமித் எழுதியதை, போலீசார் பார்த்த பிறகே பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் ஷில்பி இறந்தது தெரியவந்தது.

Also see:
அமித்தின் 10 வயது மகன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading