பெட்ரோல் டீசல் விலையுயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்ற மம்தா பானர்ஜி..

பெட்ரோல் டீசல் விலையுயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்ற மம்தா பானர்ஜி..

மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் பெட்ரோலின் விலை தற்போது 92 ரூபாயை எட்டியுள்ளது. பெட்ரோலின் மீதான செஸ் வரி ஒரு ரூபாயை மாநில அரசு குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
    மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜி, பெட்ரோல் டீசல் விலையுயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரில், ஹஸ்ரா பகுதியில் இருந்து தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் நபன்னாவுக்கு கண்டனப் பதாகையுடன் சென்றார். கொல்கத்தா மேயரான ஃபிஹாத் ஹக்கீம் ஈ-ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றார். பெட்ரோலிய தயாரிப்புகளின் விலையுயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பலவும் ஆர்ப்பாட்டாங்களை ஒருங்கிணைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    திரிணாமூல் காங்கிரஸ், ஏற்கெனவே பெட்ரோல், டீசல் உயர்வுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வரும் வேளையில், முதல்வர் மம்தா பானர்ஜி புதுமையான வகையில் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

    பெட்ரோல், டீசல் உயர்வுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்,




    முன்னதாக, ஹூக்ளி மாவட்டம் சஹாகஞ்சில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய முதல்வர் மம்தா, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். மம்தா பானர்ஜி பேசுகையில், ‘’பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நாடு முழுவதும் பொய்களையும், வெறுப்புணர்வையும் பரப்பி வருகிறார்கள். பிரதமர் மோடி, இந்த நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரராக இருக்கிறார். வீட்டுக்குள் நுழைந்து 22-23 வயது மகள்களையும், மருமகள்களையும் குறிவைத்து விசாரிக்கிறார்கள். அவர்கள் நிலக்கரி திருடர்களா? நிலக்கரி திருடர்களுடன் தொடர்பில் இருக்கும் நீங்கள் யார்? என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

    மேலும் படிக்க: எங்கள் வீட்டிலிருக்கும் மகள்களும், மருமகள்களும் நிலக்கரி திருடர்களா? - மம்தா பானர்ஜி ஆவேசம்..

    மேற்கு வங்கத்தில் பெட்ரோலின் விலை தற்போது 92 ரூபாயை எட்டியுள்ளது. பெட்ரோலின் மீதான செஸ் வரி ஒரு ரூபாயை மாநில அரசு குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

     
    Published by:Gunavathy
    First published: