மத்திய பிரதேச ஆளுநருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை... மருத்துவர்கள் தகவல்

லால்ஜி டான்டன்

 • Share this:
  மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் உடல்நலக்குறைவால் வெண்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்த மாத தொடக்கத்தில் அனுமதிக்கப்பட்ட மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் உடல்நிலையில் தற்போது வெண்டிலேட்டர் சிகிச்சை உதவியால் நிலையாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

  மூச்சுவிடுவதில் சிக்கல், காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  Also read... தாய்- தந்தை கொரோனாவால் உயிரிழப்பு... தவிக்கும் மூளை வளர்ச்சி குன்றிய மகன்

  லால்ஜி டாண்டனின் பணியை உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் கூடுதலாக பார்ப்பார் என்று அண்மையில் குடியரசுத் தலைவர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லால்ஜி டாண்டனின் வயது 85.
  Published by:Vinothini Aandisamy
  First published: