கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய கூடுதல் ஆதாரம் - என்.ஐ.ஏ தகவல்

கேரள தங்கக் கடத்தல் வழக்கில், ஹைதராபாத்தில் இருந்து துபாய்க்கு 15 கோடி ரூபாய் ஹவாலா முறையில் பணம் அனுப்பியது அம்பலமாகியுள்ளது. இதனை அடுத்து அந்த கும்பலை பிடித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய கூடுதல் ஆதாரம் - என்.ஐ.ஏ தகவல்
ஸ்வப்னா சுரேஷ்
  • Share this:
கேரள மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில், ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரிடமும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், தங்கக் கடத்தலுக்காக 15 கோடி ரூபாய் ஹவாலா பணம் துபாய்க்கு அனுப்பிய கும்பலை ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.மேலும் படிக்க...

எதிர்ப்பு முதல்வருக்கு மட்டுமே ; கட்சிக்கு இல்லை - சச்சின் பைலட் தரப்பு வாதம்

தங்கக் கடத்தலுக்காக ஹவாலா பணபரிவர்த்தனை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading