ஒரு மணிநேரத்துக்கு 800 பேருக்கு தரிசனம்: திருப்பதியில் பக்தர்களுக்கான அனுமதி எண்ணிக்கை இருமடங்காக அதிகரிப்பு..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணிநேரத்துக்கு 800 பேருக்கு தரிசனம்: திருப்பதியில் பக்தர்களுக்கான அனுமதி எண்ணிக்கை இருமடங்காக அதிகரிப்பு..
கோப்புப் படம்
  • Share this:
ஊரடங்கு தளர்வை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 17 நாட்களாக சோதனை அடிப்படையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஒரு மணி நேரத்திற்கு 500 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் 800 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதனால், நாளொன்றுக்கு 12,000 பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். அதில், சர்வ தரிசனத்தில் 3,000 பக்தர்களும், 300 ரூபாய் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்பவர்களில் 9,000 பேருக்கும் அனுமதி வழங்கப்பட உள்ளது.
மேலும் படிக்க...

10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க கல்வித்துறை ஆலோசனை: அறிவிப்பு எப்போது?திருப்பதியில் தொற்று பரவல் அதிகரித்து வந்தபோதும், திருமலையில் இதுவரை ஒரு தொற்று கூட கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
First published: June 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading