புதுச்சேரியை மிகச்சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது விருப்பம் - பிரதமர் நரேந்திர மோடி

புதுச்சேரியை மிகச்சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது விருப்பம் - பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பல மேம்பாட்டு திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன. இது புதுச்சேரிக்கு பல வளர்ச்சி வாய்ப்புகளை அளிக்கும்.

 • Share this:
  ஒருநாள் பயணமாக புதுவை மற்றும் தமிழகத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதுச்சேரியை மிகச்சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது விருப்பம் என கூறினார்.

  இது குறித்து பிரதமர் புதுச்சேரியில் பேசுகையில், “பல மேம்பாட்டு திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன. இது புதுச்சேரிக்கு பல வளர்ச்சி வாய்ப்புகளை அளிக்கும். இங்கு மக்களின் எழுச்சியுடன் இருக்கின்றனர். புதுச்சேரியில் காற்று மாறி வீசுவதை காட்டுகிறது.

  இன்று துவங்கப்பட்ட மேம்பாட்டு திட்டங்களாலும், மோசமான காங்கிரஸ் ஆட்சியில் இருந்து விடுபட்டுள்ளதாலும் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர்.

  உங்கள் முன்னாள் முதல்வர் (நாராயணசாமி) கட்சி தலைவரின் கால் செருப்பைத் தூக்க கவனம் செலுத்துபவராக இருந்தாரே ஒழிய, மக்களை ஏழ்மையில் இருந்து உயர்த்த கவனம் செலுத்தவில்லை.

  மக்களை ஏழ்மையில் இருந்து மீட்க காங்கிரஸ் அரசு பாடுபடவில்லை. புதுச்சேரியைப் பற்றி நாடு முழுவதிலும் இருக்கும் மக்கள் ஒரு வீடியோவை பார்த்தோம். அது, புயல் வெள்ளத்தின்போது காங்கிரஸ் அரசின் முதலமைச்சர் மக்களை பார்க்க வரவில்லை என்பதை எடுத்துக் காட்டியது.

  முன்னாள் முதல்வர் அதற்கு தவறான மொழி பெயர்ப்பை செய்தார். மக்களை மட்டுமல்ல கட்சி தலைவரிடமே பொய் சொன்னவர்தான் முன்னாள் முதல்வர் (நாராயணசாமி).

  பொய்யை கட்சியின் கலாச்சாரமாக கொண்டவர்கள் மக்களுக்கு சேவையாற்ற முடியுமா முடியாது. பல மாநிலங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தியுளோம். ஜனநாயக விரோதி என மற்றவர்களை கூறும் காங்கிரஸ் கட்சி, புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை.

  ஜம்மு காஷ்மீரில், தேர்தலை நடத்த முடியும் ஆனால், புதுச்சேரியில்நடத்த முடியாது. காங்கிரஸ்தான் அதற்குக் காரணம். இதற்காக மக்கள் அவர்களை தண்டிப்பார்கள்.

  காலனி ஆதிக்க சக்தியைப்போல, மக்களை பிரித்து ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியினர் விரும்புகிறார்கள். பொய் சொல்வதில் அனைத்து பதக்கங்களையும் பெற தகுதியுடையவர்கள் காங்கிரஸ் கட்சியினர்” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

  Must Read: 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி: முதலமைச்சர் அறிவிப்பு

   

  பிரதமர்,
  “கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
  மாடல்ல மற்றை யவை” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: