இந்தியாவிலேயே முதன்முறையாக யூடியூப் நேரலையில் வழக்கு விசாரணை ஒளிபரப்பு - குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி

மனுதாரர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் முழு விவரத்தையும் அறிந்துகொள்ள உதவியாக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக யூடியூப் நேரலையில் வழக்கு விசாரணை ஒளிபரப்பு - குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி
இந்தியாவிலேயே முதன்முறையாக யூடியூப் நேரலையில் வழக்கு விசாரணை ஒளிபரப்பு
  • Share this:
இந்தியாவிலேயே முதன்முறையாக குஜராத்தில் யூடியூப் நேரலையில் வழக்கு விசாரணை ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக வழக்கு விசாரணையை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் யூடியூப் மூலம் நேரலையில் ஒளிரபரப்பும் முறை குஜராத் உயர்நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இன்று தலைமை நீதிபதி விக்ரம்நாத் அமர்வில் நடந்த வழக்கு விசாரணை முதல் முறையாக நேரலையில் யூடியூபில் ஒளிபரப்பானது. இன்று முதல் அனைத்து வழக்குகளுமே யூடியூபில் நேரலை செய்யப்படும் என்றும் குஜராத் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக வழக்குகள் காணொளி வாயிலாக நடந்து வரும் சூழலில், மனுதாரர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் முழு விவரத்தையும் அறிந்துகொள்ள உதவியாக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் நடக்கும் விவாதங்களை அனைவரும் தெரிந்துகொள்ள உரிய கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் கடந்தாண்டு அறிவுறுத்தியிருந்தது. இதன் அடிப்படையிலேயே இந்த நேரலை துவங்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா போன்ற இக்கட்டான நேரங்களில் இது பெரிதும் உதவியாக உள்ளதாகவும் தலைமை நீதிபதி விக்ரம்நாத் கூறியுள்ளார்.
First published: October 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading