காற்று மாசுபாட்டை தூய்மைப்படுத்தும் கருவிகள் தீர்வல்ல: சுற்றுச்சூழல் வல்லுநர்கள் சொல்லும் நிரந்தரத் தீர்வு

காற்று மாசுபாட்டை தூய்மைப்படுத்தும் கருவிகள் தீர்வல்ல: சுற்றுச்சூழல் வல்லுநர்கள் சொல்லும் நிரந்தரத் தீர்வு
காற்று மாசுபாடு(மாதிரிப் படம்)
  • Share this:
- கபில் காஜல்
பெங்களூரு போன்ற பெருநகரங்களில் காற்று மாசுபடுதலுக்கு வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை மற்றும் அலுவலகங்கள், வீடுகளில் பயன்படுத்தப்படும் குளிரூட்டும்பெட்டிகள் (ஏசி) போன்றவற்றின் அதிகமான பயன்பாடுகள் காரணமாக மாசு அதிகரிக்கும் என குற்றம்சாட்டு கொண்டிருக்கும் நிலையில் சில தொடக்கநிலை நிறுவனங்கள் புதுயுக தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி இப்பிரச்சனைகளை எப்படி தீர்க்கின்றன.

பெங்களுரை சேர்ந்த ஆம்பி என்ற தொடக்கநிலை நிறுவனம் சுகாதார ஆய்வாளர்கள், நுகர்வோர்கள், ஊடக துறையினர் போன்றவர்களுக்கான, காற்றினை தூய்மைபடுத்த பிரத்யேகமான தொழில்நுட்பங்கள் கண்பிடிப்பதை இலக்காக கொண்டுள்ளது. இந்த நிறுவனம் தங்களுடைய காற்று மாசுப்படும் புள்ளிவிபரங்களை அவர்களுக்கு பகிர்ந்தளிக்கின்றனர். மேலும் தங்களிடம் உள்ள தொழில்நுட்ப தகவல்களை இணைப்பதன் மூலம் காற்றினை தூய்மைபடுத்தி நிறுவனங்களில் காற்றின் தரத்தை தூய்மைபடுத்தி ஓர் நிலைநிறுத்தப்பட்ட வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறது.


எங்கள் நிறுவனமான ஆம்பியில் மூலம் எங்கள் (களமானகாற்று மற்றும் வானிலை நுட்பங்கள் )சுற்றுபுறச்சுழல், காற்று, மண்,  காலநிலை ஆகியவற்றை பற்றிய அளவிட தகவல்களை சேகரித்து வருகிறோம். எங்களது செயல்சார்ந்த உள்ளுணர்வு, காட்சிபடுத்துதல், போன்ற தீர்வுகள் மூலம் அரசாங்கம், தொழில்நிறுவனங்கள், நுகர்வோர் இப்பூமி பந்தில் உள்ள அனைவரையும் பாதிக்கும் பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என்று ஆம்பியின் நிறுவனர்களில் ஒருவரான மதுசூதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ஐஐடி மாணவர்கள் அதிகம் இருக்கும் டெல்லியை சார்ந்த தொடக்க நிறுவனமான சக்ர இன்னோவேஷன் (புதுமை) தனது புதிய கண்டுபிடிப்புக்கு சக்கர கேடயம் என்று பெயர் வைத்துள்ளது. இத்தயாரிப்பு காற்றில் இருந்து வரும் 90 சதவீத கார்பனை உள்வாங்குவோதோடு, அந்த கார்பனை மையாகவும் பெயிண்டாகவும் மாற்றுகிறது என கூறுகின்றனர்.

மற்றொரு டெல்லியை சார்ந்த தொடக்கநிலை நிறுவனமான நேனோ, கிளின் நசல்பில்டர் எனும் தயாரிப்பின் மூலம் உடல்களில் செல்லும் காற்று மாசினை தடுக்கிறது. மேலும் இந்நிறுவனத்தில் ஏசியில் பொருத்தப்பட்டுள்ள ஏசி பில்டர் மூலம் அதில் இருந்து வரும் காற்றை தூய்மைபடுத்தும் கருவியாக மாற்றுகிறது.இந்நிலையில் இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் டாக்டர் யெல்லப்பா ரெட்டி கூறும்போது, இன்னும் சில நாட்கள், சில நிறுவனங்கள் தூய்மையான காற்று உள்ள சிறிய சிலிண்டர்களுடன் (உருளைவாயு) மக்களிடம் கொண்டு வருவார்கள். இதை பயன்படுத்துங்கள் மாசு காற்று தூய்மையாகிவிடும் என்பார்கள். ஆனால் காற்றை தூய்மைபடுத்தும் வழிமுறை இதுவல்ல. இது போன்ற தொழில்நுட்பம் ஒரு வேளை சில நேரங்கள் உதவலாமே ஒழிய இம்முறை நிரந்தர தீர்வாகாது என்றார்.

மேலும் அவர் கூறுகையில் தொடக்க நிறுவனங்களால் காற்றின் தரத்தினை பற்றிய தகவல்களை அளிக்கமுடியும் என்றால், ஏன் அரசு அதைபற்றிய சரியான புள்ளிவிபரங்களை அளிக்கவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் நாம் அரசின் பழக்கத்தை மாற்றவேண்டிய தேவையுள்ளது. சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையுள்ள அரசின் தேவை, சுற்றுச்சூழலை பாதிக்கும் அதீத வளர்ச்சியை கட்டுபடுத்தவேண்டிய அவசியமுள்ளது. எனவே நாம் பொறுப்புள்ள ஓர் அரசாங்கத்தின் மூலமாக இச்சுற்றுச்சூழல் பிரச்சனைகளை தீர்கலாமே ஒழிய தொழில்நுட்பங்களால் அல்ல என்றார்.

இதுபோன்ற காற்று மாசுபடுவதை தடுக்கும் புதிய கண்டுபிடிப்புகளை தவிர்த்து பல தொடக்க நிறுவனங்கள் தாங்கள் தயாரித்துள்ள காற்றை தூய்மைப்படுத்தும் கருவிகளே இதற்கான தீர்வுகள் என்று கருதுகின்றனர். மேலும் இக்காற்றினை தூய்மைபடுத்தும் இந்த நிறுவனங்கள் 99 சதவீத மாசுபாடுகள், சுவாச ஓவ்வாமை, தீமை ஏற்படுத்தும் வாயுக்கள், பாக்டிரியா, வைரஸ் போன்றவற்றை நீக்கி தகுந்த ஈரப்பதத்துடன் நிலங்களை பாரமரிக்க உதவும் என்கின்றனர். இன்னும் சில நிறுவனங்கள் மகரந்தம், செல்லப்பிராணிகள் உட்பட தீமைபயக்கும் வாயுக்களிலிருந்து வரும் தீமைகளை தங்கள் கருவிகள் தடுக்கும் என இந்நிறுவனங்கள் உரிமை கோருகின்றன. அவர்களின் இலக்கு கலப்பிடமில்லாத காற்று எனவும் அவர்களின் purifiers (தூய்மைபடுத்தும் கருவி) காற்றின் தூய்மையின்மையால் ஏற்படும் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமைகளை கட்டுபடுத்தும் என உரிமை கோருகின்றனர் என்று யெல்லப்பா கூறினார்.

இந்நிலையில் இந்திய சூழலியல் அறிவியல் நிறுவனத்தை சார்ந்த டாக்டர் ராமசந்திரா கூறும்போது,  இக்காற்று தூய்மைபடுத்தும் காற்று சுத்திகரிப்பான் கருவிகள் காற்று மாசுபடுதலை தடுக்க சரியான தீர்வு இல்லை என்றார். மேலும் காற்று சுத்திகரிக்கும் கருவி மின்சாரத்தை பயன்படுத்தி கொண்டே காற்றின் தரத்தை இக்கருவி அதிகபடுத்தும் என்ற கருத்து சரியானது அல்ல என்றும்  இக்காற்று தூய்மைபடுத்தும் கருவிகள் மின்சாரத்தின் துணையோடு தான் செயல்படும் என்றும் இது மின்சாரப் பயன்பாட்டால் 14% கார்பன்டை ஆக்ஸைடால் பாதிக்கபட்டிருக்கும் பெங்களுரில் உங்கள் வீட்டில் காற்றினை தூய்மைபடுத்தி அதற்கு வெளியே காற்றினை அதை விட அதிகமாக மாசுபடுத்துவது ஆகும். இது நமது நிலைநிறுத்தபட்ட இலக்கிற்கு ஊறு விளைவிப்பது ஆகும் என்று எடுத்துரைத்தார்.

ஜெகதிஸ் ரெட்டி என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் கூறும் போது, மரங்களே இயற்கையான உண்மையான தூய்மைபடுத்தும் கருவிகள். நாம் எதுவெல்லாம் இயற்கையிடமிருந்து விலையில்லாமல் பெறுகிறோமோ அதை எல்லாம் தயாரிப்பு பொருளாக்கி நம்மிடமே விலைக்கு விற்றுவிடுகிறார்கள். மேலும் அவர் கூறுகையில் இப்பரிவர்த்தனைகள் அனைத்தும் பணம் சம்பாதிபதற்கான உத்திகளே. இது ஓர் நிறுவனமாக்கபட்ட பதுக்கல்களே. நமது சுற்றுபுறச்சூழலும், சூழலியலுமே பாதுகாக்கும் பழைய முறைகளே காற்று மாசுபடுத்தலை தடுக்குமே தவிர தொழில்நுட்பங்கள் அல்ல. இந்தியாவே உலகிலேயே பெரிய சந்தை. இவர்கள் பணம் சம்பாதிக்க இலக்கு இந்தியாவே. எனவே மக்களின் அச்சத்தோடு விளையாடி தங்களது தொழில்களை வளர்க்க நினைக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

(இந்த செய்தியின் எழுத்தாளர் 101Reporters.com-ன் அங்கத்தினர்.)
First published: July 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading