பேய் பிடித்ததாக கூறி மருமகளை தலையில் அடித்து துன்புறுத்திய குடும்பம்..

மாமியார் வீட்டினர் பேய் ஓட்டுவதாக கூறி ஒரு இளைஞரை அழைத்து வந்து மருமகளை அடித்து துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பேய் பிடித்ததாக கூறி மருமகளை தலையில் அடித்து துன்புறுத்திய குடும்பம்..
குடும்ப வன்முறை
  • Share this:
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் பேய் பிடித்ததாக சந்தேகமடைந்த மாமியார் வீட்டினர் பேய் ஓட்டுவதாக கூறி ஒரு இளைஞரை அழைத்து வந்து மருமகளை அடித்து துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தெலுங்கானா மாநிலம் கரீம்நகரை சேர்ந்த ரஜிதாவும் - மல்லேஷ் ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மாதமே ஆன பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் மாமியார் குடும்பத்தினர் மருமகளுக்கு பேய் பிடித்ததாக கூறி அந்த பகுதியில் உள்ள ஒரு இளைஞரை வீட்டிற்கு அழைத்து வந்து ரஜிதாவுக்கு பேய் ஓட்டுகி்றோம் என்ற பெயரில் அடித்து துன்புறுத்தினர்.


பேய் ஓட்டுவதற்காக வந்த இளைஞர் அடித்ததில் தலையில் பலத்த காயமடைந்த ரஜிதா சுய நினைவை இழந்து தற்போது தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வெளியான தகவல்கள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
First published: August 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading