திருப்பதியில் மேலும் 3 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேலும் மூவாயிரம் பேர் தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது.

திருப்பதியில் மேலும் 3 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி
கோப்புப் படம்
  • Share this:
கொரோனா பரவல் காரணமாக, பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்த திருப்பதி ஏழுமலையான் கோயிலில், கடந்த 8ஆம் தேதி, ஊழியர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

அதன்பிறகு கடந்த 11ஆம் தேதி முதல் மற்ற பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம், நாள்தோறும் 300 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் மூவாயிரம் பக்தர்களும், இலவச தரிசனத்தில் 3,000 பக்தர்களும் வந்து செல்கின்றனர்.



Also read... ரஞ்சி கோப்பை - பெங்கால் அணிக்கான பரிசுத் தொகையை வழங்காத பிசிசிஐ

அவர்களோடு, விஐபி தரிசனத்தில் 750 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மேலும் 3000 பக்தர்கள் 300 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்கியுள்ள தேவஸ்தானம், அதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. இதன்மூலம், நாளொன்றுக்கு 9750 பக்தர்கள் ஏழுமலையான தரிசனம் செய்ய உள்ளனர்.
First published: June 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading