சிறையில் 39 பிரசவங்கள் நடந்துள்ளன: ஜாமியா பல்கலைக்கழக கர்ப்பிணி மாணவியின் ஜாமினை மறுக்கும் டெல்லி காவல்துறை

பத்து வருடங்களில் சிறையில் 39 பிரசவம் நடைபெற்றது. கர்ப்பமாக இருக்கிறார் என்பதால் சஃபூரா ஷர்காருக்கு ஜாமின் வழங்கவேண்டிய அவசியமில்லை என்று டெல்லி காவல்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

சிறையில் 39 பிரசவங்கள் நடந்துள்ளன: ஜாமியா பல்கலைக்கழக கர்ப்பிணி மாணவியின் ஜாமினை மறுக்கும் டெல்லி காவல்துறை
சஃபூரா ஷர்கார்
  • Share this:
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. அந்த வழக்கில் ஜாமியா பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் சஃபூரா ஷர்காரைக் ஏப்ரல் 10-ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். நான்கு மாத கால கர்ப்பமாக இருந்த அவர் மீது தீவிரவாத தடுப்புச் சட்டம், உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. சிறையில் இருக்கும் சஃபூரா ஷர்கார், கர்ப்பமாக இருப்பதால் ஜாமின்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது டெல்லி காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், ‘கர்ப்பாக இருப்பது அவர் மீதான குற்றத்தை நீர்த்துப் போகச் செய்யாது. அவருக்கு சிறையில் தேவையான மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றன. தீவிரமான வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கும் கர்ப்பமாக இருக்கும் சிறைக் கைதிகளுக்கு விலக்குகள் ஏதும் வழங்கப்படுவதில்லை. சிறையில் இருக்கும் காலத்தில் சட்டம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் மருத்துவ வசதிகளும் வழங்குகிறது.கடந்த 10 ஆண்டுகளில் டெல்லி சிறைச்சாலையில் 39 பிரசவம் நடைபெற்றுள்ளது. ஷர்கார் தனிஅறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை தினமும் மருத்துவர்கள் சோதனை செய்துவருகின்றனர்’ என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.  டெல்லி உயர் நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

முன்னதாக, விசாரணை நீதிமன்றத்தில் ஷர்கார் தாக்கல் செய்த ஜாமின் மனு ஜூன் 4-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அதனையடுத்து, அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading