ஏர் கூலருக்காக வெண்டிலேட்டரை கழற்றிய உறவினர்கள் - பரிதாபமாக உயிரிழந்த கொரோனா நோயாளி

கொரோனா நோயாளியை பார்க்கச் சென்ற உறவினர்களின் செயலால், நோயாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

ஏர் கூலருக்காக வெண்டிலேட்டரை கழற்றிய உறவினர்கள் - பரிதாபமாக உயிரிழந்த கொரோனா நோயாளி
கோப்பு படம்
  • Share this:
கொரோனா வார்டில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்காக அவரது உறவினர்கள் குளிர்சாதன பெட்டியை பொருத்த வென்டிலேட்டருக்கு செல்லும் மின் இணைப்பை தவறுதலாக துண்டித்ததால் நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் உள்ள மஹாராவ் பீம்சிங் மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியை கடந்த 15ம் தேதி அவரது குடும்பத்தினர் பார்க்க சென்றிருந்தனர்.



 

அவர்கள் உடன் கொண்டு வந்திருந்த குளிர்சாதன பெட்டியை கொரோனா வார்டில் பொருத்துவதற்காக நோயாளிக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் கருவியின் இணைப்பை துண்டித்துள்ளனர்.

இதையடுத்து, சிறிது நேரத்தில் நோயாளி மூச்சுத்திணறலால் உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர் மருத்துவரை தாக்கியுள்ளனர்.Also read... கொரோனா தாக்கிய டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கவலைக்கிடம்

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் நியமித்துள்ள நிபுணர் குழு இன்று தனது அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. அதைத்தொடர்ந்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
First published: June 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading