வாரக்கணக்கில் எரியும் தீ - எண்ணெய் வயலை மூட அசாம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

அசாமில் மூன்று வாரங்களாக பற்றி எரிந்து வரும் எண்ணெய் வயலை மூடும்படி அம்மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

வாரக்கணக்கில் எரியும் தீ - எண்ணெய் வயலை மூட அசாம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு
(Source: NDRF)
  • Share this:
தின்சுகியா மாவட்டத்தில் உள்ள பக்ஜான் பகுதியில் ஆயில் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் வயலில் கடந்த மே மாதம் 27 ல் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அதனை அணைக்கும் பணியின் போது இரு வீரர்கள் உயிரிழந்தனர்.

இருப்பினும் மூன்று வாரங்களாக தீ எரிந்து வருவதால் ஏராளமான மரங்கள் மற்றும் வனவிலங்குகள் சேதமடைந்துள்ளன. தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பக்ஜான் எண்ணெய் வயலை மூடும்படி அம்மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.


உரிய அனுமதி பெறாமல் எண்ணெய் வயலை இயக்கி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதுடன், எண்ணெய் வயல் கசிவுகள் நீர்நிலைகளில் கலக்காமல் தடுக்க வேண்டும் என்றும் ஆயில் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Also read... சிறப்புக் கட்டுரை: வெறுத்தவர்களையும் வென்றவர் ‘விஜய்’! #HBDTHALAPATHYVijay

பக்ஜானில் செயல்பட்டு வரும் 17 எண்ணெய் வயல்களில் இருந்து நாளொன்றுக்கு ஆயிரத்து 200 கிலோ கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோன்று 5 கிணறுகளில் இருந்து எரிவாயு உற்பத்தி செய்யப்பட்டு வந்தது,
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading