ஆண்ட்ராய்டு நவீன உலகில் எத்தனையோ மாற்றங்களை இந்த உலகம் கண்டுவிட்டபோதிலும், விண்வெளி முதல் எல்லாத்துறைகளிலும் கால்தடம் பதித்து பெண்கள் தங்களை நிரூபித்துவிட்டபோதிலும் பெண்களுக்கு எதிரான பாகுபாடு முழுவதும் குறைந்துவிட வில்லை. இன்றும், ஆண்பிள்ளைகள்தான் வேண்டும் என்று கூறும் பெற்றோரைக் காணமுடியும்.
இன்றும் தமிழ்நாட்டில் ஒருசில இடத்தில் பெண் சிசுக் கொலை நடைபெறுகிறது என்று செய்தி வேதனை தரக் கூடிய ஒன்றாக இருந்தது. முதல் குழந்தை பெண்ணாக இருந்து இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்தால் வருந்தும் சூழலும் அதிக அளவில் உள்ளது. ’ஐந்து பெண்களைப் பெற்றவன் ஆண்டி’ என்று பழமொழி உண்டு. இந்த கருத்துகளை எல்லாம் உடைத்து நொறுக்கும் வகையில் ராஜஸ்தானில் ஒரு குடும்பம் சாதித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ சகாதேவ் சகரன். ஏழை விவசாயி. இவருக்கு 5 பெண் பிள்ளைகள். நிலத்தில் உழைத்து ஓடாக தேய்ந்து, அதில் கிடைத்த வருமானத்தை கொண்டு பெண்களை படிக்க வைத்தார். அந்த பெண்களும் தந்தையின் கஷ்டத்தை புரிந்து படித்தனர்.
விவசாயியின் முதல் இரண்டு பெண்கள்
ரோமா, மஞ்சு ஆகியோர் ராஜஸ்தான் நிர்வாக சேவை தேர்வில் வெற்றி பெற்று, அம்மாநிலத்தின் உயர் பதவிகளுக்கு சென்றனர். இவர்களின் அடுத்த மூன்று சகோதரிகளான அன்சு, ரீத்து, சுமன் ஆகியோர் கடந்த 2018ல் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வு முடிவை ராஜஸ்தான் அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
strong>Follow @ Google News:
கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதில், அன்சு, ரீத்து, சுமன் ஆகிய 3 பேரும் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனையை 5 சகோதரிகளும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு, கொண்டாடி வருகின்றனர். இந்தப் பெண்களின் சாதனைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இத்தேர்வில் மொத்தம் 2,023 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் ராஜஸ்தான் அரசின் பல்வேறு முக்கிய துறைகளில், உயர் பொறுப்புகளில் நியமிக்கப்பட உள்ளனர்.