Exclusive :சாலை ஓரத்தில் குவியல், குவியலாக கொட்டப்பட்ட காலாவதியான மருந்து- மாத்திரைகள்!

Exclusive :சாலை ஓரத்தில் குவியல், குவியலாக கொட்டப்பட்ட காலாவதியான மருந்து- மாத்திரைகள்!

  • Share this:
    நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதுசத்திரம் அருகே உள்ள மேம்பாலத்தின் ஓரத்தில்... அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டு காலாவதியான மருந்து மாத்திரைகள் குவியல், குவியலாக கொட்டப்பட்டுள்ளன.

    பொதுவாக, சேகரிக்கப்படும் மருந்து, மாத்திரை, ஊசி உள்ளிட்ட  மருத்துவக்கழிவுகளை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு (Common Bio-medical waste treatment Facility) கொண்டு சென்றுதான் அழிக்கவேண்டும். காரணம், இதன்மூலம் நோய் பரவும் அபாயம் உள்ளது.

    மேலும், மருத்துவக்கழிவுகளை மட்டுமே கையாள்வதற்கு அழிப்பதற்கு தமிழகத்தில் 11 Common Bio-medical waste treatment Facility மையங்கள் உள்ளன. அப்படியிருந்தும் இந்த மருந்து, மாத்திரைகள் எங்கிருந்து யார் கொட்டினார்கள்?  இவ்வளவும் கொண்டு வந்து கொட்டப்பட்டதன் காரணம் என்ன? என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்துவருகிறார்கள்.

    இவை,  எந்த மருத்துமனைக்கு வழங்கப்பட்டது, அவை முறையாக அழிக்கப்படாமல் சாலை ஓரத்தில் கொட்டி சென்றதன் நோக்கம் என்ன என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
    Published by:Yuvaraj V
    First published: