விழுப்புரம் : சிறுமிகளுக்கு இலவசமாக பரதநாட்டியம் கற்றுத்தரும் முஸ்லிம் இளைஞர்

விழுப்புரம் : சிறுமிகளுக்கு இலவசமாக பரதநாட்டியம் கற்றுத்தரும் முஸ்லிம் இளைஞர்

விழுப்புரம் : சிறுமிகளுக்கு இலவசமாக பரதநாட்டியம் கற்றுத்தரும் முஸ்லிம் இளைஞர்

  • Share this:
    விழுப்புரம் : சிறுமிகளுக்கு இலவசமாக பரதநாட்டியம் கற்றுத்தரும் முஸ்லிம் இளைஞர்

    செவ்வியல் ஆடல் வகைகளில் ஒன்றாகப் பரதநாட்டியம் திகழ்கின்றது. கூத்து, ஆடல், நாட்டியம், சின்னமேளம், சதிர் எனப் பல பெயர்களில் இக்கலை வடிவம் அழைக்கப்பட்டது. தற்காலத்தில் இது ‘பரதநாட்டியம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

    பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோயில்களில் ஆடியது நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமாகக் கூறப்படுகிறது. முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதல் இந்த நாட்டியக்கலையின் நோக்கமாகும்.இந்த நடனத்தை ஆடுபவர்களில் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன்கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. \'அடவு\' என்று அழைக்கப்படும் உடல் அசைவுகள், கை முத்திரைகள் சேர்த்த நடனமாக இது ஆடப்படுகிறது. சிதம்பரம் மற்றும் மேலக்கடம்பூர் ஆலயங்களில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.

    விழுப்புரம் தோகைப்பாடி கப்பூர் என்ற கிராமத்தைச்சேர்ந்தவர் பாஷா. முஸ்லிம் மதத்தைச்சேர்ந்தவராக இருந்தாலும் கப்பூர் கல்வி வளர்ச்சி மையம் சார்பில் பரதநாட்டியலக்கலையை முடித்துள்ளார்.
    24 வயதுடைய இளைஞர் பாஷா, அக்கிராமத்திலுள்ள சிறுமிகளுக்கு இலவசமாக பரதநாட்டியம் வகுப்பை 6 மாதங்களாக எடுத்து வருகிறார்.  இவர்,  இளநிலை படிப்பில் பரதநாட்டியம் கலை முடித்தவர். பல மேடை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசுகளையும்  பெற்றவர்.

    அந்த கிராமத்தில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு  2 மணி முதல் 5 மணி வரை பரத நாட்டியத்தைக்  கற்று தருகிறார். அக்கிராமத்தை சேர்ந்த சிறுமிகளும் ஆர்வமாக வந்து வகுப்பில் கலந்துகொண்டு, தங்களின் நேரத்தை கொரோனா காலகட்டத்தில் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்கிறார்கள்.
    சிறுமிகளுக்கு, எளிமையான முறையில் நடனமாடி,  முகப்பாவனைகளோடு, சிறப்பாக கற்றுத் தருகிறார் பாஷா.


    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published: