விழுப்புரம்: குழந்தைகளுக்கு  புதிய தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

விழுப்புரம்: 6 வார குழந்தைகளுக்கு  புதிய தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது

விழுப்புரம்: 6 வார குழந்தைகளுக்கு  புதிய தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது

  • Share this:
    விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல் நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.

    விழுப்புரம் மாவட்டத்தில் 6 வாரங்கள் நிறைவடைந்த குழந்தைகளுக்கு புதியதாக நியுமோகோக்கல் கான்ஜீகோட் தடுப்பூசி அளிக்கப்படவுள்ளது.  2021–22 ஆம் ஆண்டு 21,854 குழந்தைகளுக்கு இத்தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. நியுமோகோக்கல் நோய் ஒரு பெரிய அளவில் பொது சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது. இது நியுமோகோக்கல் நிமோனியாவுக்கு முக்கிய காரணமாகும்.

    இத்தடுப்பூசி குழந்தைகளுக்கு அளிப்பதன் மூலம் நிமோனியா, மூளைக்காய்ச்சல் மற்றும் பாக்டீரேமியா போன்ற கடுமையான நியுமோகோக்கல் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    குழந்தைகளுக்கு ஒன்றரை மாத்தில் முதல் தவணையும், மூன்றரை மாதத்தில் இரண்டாம் தவணையும் மற்றும் 9-வது மாதத்தில் ஊக்குவிப்பு தவணையிலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். இத்தடுப்பூசி இனி ஒவ்வொரு புதன்கிழமையும் 345 கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் 21 நகர சுகாதார செவிலியர்கள் மூலம் குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    First published: