விழுப்புரம் : இன்றைய செய்திகள் தொகுப்பு (ஜூலை 26)

Local18

விழுப்புரம் : இன்றைய செய்திகள் தொகுப்பு (ஜூலை 26)

  • Share this:
    1) விழுப்புரம்: சிறுமிகளுக்கு ’தொடுதல்’ குறித்து பொம்மலாட்டம்  மூலம் விழிப்புணர்வு


    தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆங்காங்கே பாலியல் குற்றங்கள், குழந்தைத்தொழிலாளர்களாக துன்புறுத்தப்படுதல் உள்ளிட்ட  பல பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. இதனை,  சமாளிக்க முடியாமல் சிலர் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்.
    அவர்களுக்கு தைரியமூட்டும் விதமாக காவல் துறையினர்,   இதர தன்னார்வலர்கள் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதுபோன்று, அரசு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியில் சமூக ரீதியான விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், களத்தில் இறங்கியுள்ளார்கள்.

    அதுபோல, விழுப்புரம் செஞ்சி அடுத்து செ.குன்னத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியைச்  சேர்ந்த  தமிழ் ஆசிரியர் ஹேமலதா அப்பள்ளி  மாணவிகளுக்கு, தொடுதல்(  good touch, Bad touch ) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    2) விழுப்புரம்: அழிந்துவரும் கைவினைப்பொருட்களுக்கு புத்துயிர் கொடுத்து வேலைவாய்ப்பு


    கைவினைப்பொருட்கள், தொழில்நுட்ப காரணங்களால் நாளுக்கு வீழ்ச்சியை சந்தித்துவருவதால் புத்துயிர் கொடுக்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதன்மூலம், வேலைவாய்ப்பையும் உருவாக்கிவருகிறார்கள்.

    கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்திற்காக  தங்களுக்கு அருகில் கிடைக்கும் மூலப் பொருட்களைக் கொண்டு கைவினைப் பொருட்களைத் தயாரிக்கிறார்கள்.

    ஆனால், தமிழகத்தில் கைவினைப் பொருட்களின் வளர்ச்சி அழிவின் உச்சகட்டத்தில் உள்ளது. அனைவரும் டெக்னாலஜி பக்கமாக நகர்த்தப்படுகிறார்கள். ஆனால்,  ஒரு சிலர் கலையின் அழிவினை புரிந்துக்கொண்டு, அதற்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறார்கள். அந்தவகையில், இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் (INDIAN BANK SELF employment TRAINNING INSTITUTE) சார்பில் கைவினை பொருட்கள் உருவாக்கப்படுகிறது.  இந்த அமைப்பிற்கு பயிற்றுனராக உமாபதி, இயக்குநராக அனிதா  செயல்பட்டு வருகிறார்கள்.
    இவர்கள், பல்வேறு வகையான கைவினைப் பொருட்களை செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். மூங்கிலைக் கொண்டு பொருட்கள் செய்வதில் நமக்கு முதலில், ஞாபகம்  வருவது மூங்கில் கூடை மட்டும் தான்.

    வித்தியாசமான முயற்சியாக, பொதுமக்களுக்கு இன்னும் கூடுதலாக  பயன்படும் பொருட்களை  உருவாக்கியும் விற்பனை செய்தும் வருகிறார்கள். தேங்காய் ஓடு, தேங்காய் நார், கடல் சிற்பி, மண்ணால் ஆன பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு கலைவண்ணத்துடன், கைவினைப் பொருட்களை செய்துவருகிறார்கள்.

    3) விழுப்புரம் : சிறுமிகளுக்கு இலவசமாக பரதநாட்டியம் கற்றுத்தரும் முஸ்லிம் இளைஞர்


    செவ்வியல் ஆடல் வகைகளில் ஒன்றாகப் பரதநாட்டியம் திகழ்கின்றது. கூத்து, ஆடல், நாட்டியம், சின்னமேளம், சதிர் எனப் பல பெயர்களில் இக்கலை வடிவம் அழைக்கப்பட்டது. தற்காலத்தில் இது ‘பரதநாட்டியம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

    பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோயில்களில் ஆடியது நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமாகக் கூறப்படுகிறது. முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதல் இந்த நாட்டியக்கலையின் நோக்கமாகும்.இந்த நடனத்தை ஆடுபவர்களில் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு.

    சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன்கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. \'அடவு\' என்று அழைக்கப்படும் உடல் அசைவுகள், கை முத்திரைகள் சேர்த்த நடனமாக இது ஆடப்படுகிறது. சிதம்பரம் மற்றும் மேலக்கடம்பூர் ஆலயங்களில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.

    விழுப்புரம் தோகைப்பாடி கப்பூர் என்ற கிராமத்தைச்சேர்ந்தவர் பாஷா. முஸ்லிம் மதத்தைச்சேர்ந்தவராக இருந்தாலும் கப்பூர் கல்வி வளர்ச்சி மையம் சார்பில் பரதநாட்டியலக்கலையை முடித்துள்ளார்.

    24 வயதுடைய இளைஞர் பாஷா, அக்கிராமத்திலுள்ள சிறுமிகளுக்கு இலவசமாக பரதநாட்டியம் வகுப்பை 6 மாதங்களாக எடுத்து வருகிறார்.  இவர்,  இளநிலை படிப்பில் பரதநாட்டியம் கலை முடித்தவர். பல மேடை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசுகளையும்  பெற்றவர்.

    அந்த கிராமத்தில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு  2 மணி முதல் 5 மணி வரை பரத நாட்டியத்தைக்  கற்று தருகிறார். அக்கிராமத்தை சேர்ந்த சிறுமிகளும் ஆர்வமாக வந்து வகுப்பில் கலந்துகொண்டு, தங்களின் நேரத்தை கொரோனா காலகட்டத்தில் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்கிறார்கள்.
    சிறுமிகளுக்கு, எளிமையான முறையில் நடனமாடி,  முகப்பாவனைகளோடு, சிறப்பாக கற்றுத் தருகிறார் பாஷா.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published: