கோவை:கொரோனாவால் இறந்தவர்களை நல்லடக்கம் செய்யும் திமுகவினர்!

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் சடலங்களை திமுகவினர்  உரிய மரியாதையுடன் அடக்கம் செய்து வருகின்றனர்

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் சடலங்களை திமுகவினர்  உரிய மரியாதையுடன் அடக்கம் செய்து வருகின்றனர்

 • Share this:
  கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் சடலங்களை திமுகவினர்  உரிய மரியாதையுடன் அடக்கம் செய்து வருகின்றனர்.

  கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த  77 வயது முதியவர் கொரானாவால் பாதிக்கப்பட்டு அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி ஜூன் 9ஆம் தேதி காலை 6.00 மணி அளவில் அவர் காலமானார்.  முதியவரின் குடும்பத்தினர்,  திமுக 74 -வது வார்டு மருத்துவ சேவை அணி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவி நாடினர்.

  அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க  இறந்தவரின் இல்லத்திற்குச் சென்று உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன், இறந்தவரின் உடலை முறையாக கைப்பற்றி, அனைத்து விதமான சட்ட நடவடிக்கைகளை முடித்து  மதியம்  12.00 மணி அளவில் ஆத்துப்பாலம் மின் மயானத்தில் திமுகவினர் சார்பில் உடல் தகனம் செய்யப்பட்டது.

  இதைத்தொடர்ந்து, கோவை சிங்காநல்லூர் பகுதியில் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற முதியவர், நேற்று இரவு இறந்துவிட்டார்.  இந்த தகவல் கோவை திமுக கழகப் பொதுக்குழு உறுப்பினர் மு.மா.ச.முருகனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர், சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினரிடம் அனுமதி பெற்ற பின்பு, கட்சியினருக்கு தகவல் தெரிவித்தார்.

  அதன்படி, பொறுப்புக் குழு உறுப்பினர்  அமானுல்லாவின் தலைமையில்,  இ.எம்.நாகூர் அனிபா படிப்பகத்தின் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து அந்த ஆதரவற்ற முதியவரின் உடலை நல்லடக்கம் செய்துள்ளனர்.

  மேலும், உதவிக்காகத் தேவைப்படுவோர் 78068 54106,  9952497111 மற்றும் 8682922282 ஆகிய தொலைப்பேசி எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவினரின் இந்த சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

  செய்தியாளர்: க.ராஜ்குமார்-கோவை
  Published by:Murugesh M
  First published: