Tamil Latest News Today Live Updates : தமிழகத்தில் வெகுவாக குறைந்த புதிய கொரோனா தொற்று, உயிரிழப்பு

Today News Tamil - Live Updates:கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | June 10, 2021, 19:41 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 12 DAYS AGO

    AUTO-REFRESH

    19:42 (IST)

    தமிழகத்தில் வெகுவாக குறைந்த புதிய கொரோனா தொற்று, உயிரிழப்பு

    தமிழகத்தில் கொரோனாவால் புதிததாக 19448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 31360 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 351 பேர் உயிரிழந்துள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,56,681  ஆக அதிகரித்துள்ளது.
    மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 31,360 கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிலுருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,97,299 ஆக உள்ளது.

    18:16 (IST)

    கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது; விரைவில் கொரோனா விரட்டியடிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பும் -  ஈரோட்டில் அமைச்சர் பெரிய கருப்பன் பேட்டி

    18:16 (IST)

    ஜூன் 30 வரை நீதிமன்ற பணிகள்  ஆன்லைனில்  தொடரும்; 14ம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள் - சென்னை உயர்நீதிமன்றம் தலைமை பதிவாளர் தனபால் அறிவிப்பு

    17:28 (IST)

    திங்கள் முதல் 50% பணியாளர்கள் : ஐகோர்ட் உத்தரவு

    ஜூன் 14ஆம் தேதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையின் அனைத்து பிரிவுகளும் செயல்பட வேண்டும் - தலைமை பதிவாளர் தனபால் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என உத்தரவில் தகவல்.நீதிமன்ற ஊழியர்கள் இரு பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் இரண்டு நாட்கள் பணி என சுழற்சி முறையில் பணிக்கு வர அறிவுறுத்தல்

    17:27 (IST)

    நீட் தேர்வு தொடர்பாக தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை

    நீட் தேர்வு தொடர்பாக தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை.இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முதல்வரின் நேரடி செயலாளர்கள் உதயசந்திரன், உமாநாத், சண்முகம் ஆகியோர் உள்ளனர்

    17:4 (IST)

    தமிழகத்தில் 5 மாநகராட்சி ஆணையர்கள் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம

    தமிழகத்தில் 5 மாநகராட்சிகளின் ஆணையர்கள் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சி ஆணையராக கே.பி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுத்துறை துணை செயலாளரான டி.கிறிஸ்துராஜ், சேலம் மாநகராட்சி ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகராட்சி ஆணையராக கிராந்தி குமார் படியும் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக விஷ்ணு சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி தென்மண்டல துணை ஆணையராக உள்ள ராஜ கோபால் சுங்கரா கோவை மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் தவிர்த்து 16 உதவி ஆட்சியர்களும் பணியிடைமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    17:3 (IST)

    ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் திருநங்கைகள்

    தென்காசியில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் திருநங்கைகள், நிவாரணம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 93 திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலருக்கு கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் கரகாட்டம், கும்மிபாட்டு போன்ற கிராமிய நிகழ்ச்சிகளே வாழ்வாதாரமாக இருந்து வருகின்றன. தற்போது ஊரடங்கால் கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் வருமானம் இன்றி தவித்து வரும் திருநங்கைகள், நிவாரணம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்துள்ளனர்.

    16:11 (IST)

    மத்திய அரசுக்கு  ஒன்றிய அரசு என பெயர் சூட்டும் விழாவில் கவனம் செலுத்துவதை தவிர்த்து  மத்திய அரசிடம் தடுப்பூசியை பெறுவதில் வெற்றி பெற வேண்டுமே தவிர மத்திய அரசை குற்றம் சொல்லியோ குறை சொல்லியோ நம்முடைய பொறுப்பிலிருந்து தட்டிக்கழிக்க கூடாது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேட்டி

    15:55 (IST)

    சென்னை பல்கலைக்கழக ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வுகள் 21ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிப்பு

    சென்னை பல்கலைக்கழக ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வுகள் வருகின்ற 21ஆம் தேதி முதல் நடைபெறும் என பல்கலைக்கழகம் அறிவிப்பு. மூன்று மணி நேரம் ஆன்-லைன் வழியில் தேர்வு நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.தேர்வுக்குரிய கால அட்டவணை மற்றும் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு www.unom.ac.in என்கிற இணையதள பக்கத்தில் வருகின்ற 14 மற்றும் 15ம் தேதிகளில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    15:28 (IST)

    கன்னியாகுமரியில் தமிழ் பண்பாட்டின் அடையாளமாக உள்ள திருவள்ளுவர் சிலையை, இரவிலும் கண்டுகளிக்கும் வகையில், லேசர் ஒளியூட்டல் வசதி அமைக்கப்படும் - சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்