சிங்கிளா இருப்பதே மேல்....ஏன் இப்படி சொல்றாங்கனு தெரியுமா..? இதுக்குதான்..!

உறவுகள் மகிழ்ச்சி தர கூடியதாக இருக்க வேண்டுமே தவிர உங்கள் மீது சுமையாக இறங்க கூடாது. துளியும் சகித்து கொள்ள முடியாத உறவால் பாதிக்கப்படுவதை விட அந்த உறவை கைவிட்டு தனிமையில் இருப்பது சிறந்தது.

Advertisement
தற்போதைய நவீன தொழிநுட்ப காலகட்டத்தில் காதல் செய்யாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். படிக்கும் பள்ளி பருவத்தினர் முதல் அலுவலகத்தில் பணிபுரியும் இளைஞர்கள் வரை அனைவரும் சிக்கி இருப்பது காதல் என்ற வலையில். இந்த வலை சிலருக்கு தேனாகவும், சிலருக்கு விஷமாகவும் மாறுகிறது.

காதலில் இருப்பது ஒரு உணர்வு மட்டுமல்ல. அந்த காதல் சமூக ஊடகத்திலேயே மூழ்கி இருப்போருக்கு தங்கள் சிறப்பான உறவை வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்ட தேவையான ஒன்றாகவும் பலருக்கு இருக்கிறது. "blessed with the best" என்ற ஹேஷ்டேக் தங்கள் காதல் துணையுடன் இருக்கும் எல்லா படங்களிலும் பகிரும் ஒன்றாகவும் உள்ளது.

ஆனால் காதலிப்பவர்கள் எல்லோரும் ஒரு உண்மையான அக்கறையுள்ள துணையை கொண்டிருக்கிறார்களா என்றால் பலரது பதில் இல்லை என்பதாகவே இருக்கும். ஏனெனில் மக்கள் சில சமயங்களில் தாங்கள் காதலிக்கிறோம் என்பதை மட்டுமே நம்புகிறார்களே தவிர்த்து, அந்த ரயிலில் அவர்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா, இல்லையா என்பதை மறந்து விடுகிறார்கள். காதலில் இருப்பது அல்லது ஒருவருடன் இனிய உறவில் இருப்பது என்பதன் அர்த்தம் தான் என்ன.?

இங்கே எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், ஒரு நபருடன் நமக்கு இருக்கும் உறவு மற்றும் பிணைப்பு நம்மை மகிழ்ச்சியடைய செய்யவில்லை என்றால், அந்த உறவை விட்டு வெளியேறுவதே சரி. அது 10 நாள் பழக்கமாக இருந்தாலும் சரி, 10 ஆண்டுகள் பிணைப்பாக இருந்தாலும் சரி என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.



இங்கே அக்கறையற்ற உறவு என்பதில் பாதுகாப்பின்மை, சுயநலம், ஆதிக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றால் ஒருவர் பாதிக்கப்படுவதை உணர்த்துகிறது. இத்தகைய உறவில் இருப்பதன் மூலம் நம்மை நாமே ஆபத்தில் சிக்க வைத்து கொள்கிறோம். உறவுகள் மகிழ்ச்சி தர கூடியதாக இருக்க வேண்டுமே தவிர உங்கள் மீது சுமையாக இறங்க கூடாது. துளியும் சகித்து கொள்ள முடியாத உறவால் பாதிக்கப்படுவதை விட அந்த உறவை கைவிட்டு தனிமையில் இருப்பது ஏன் சிறந்தது என்பதற்கான சில காரணங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

அட்ஜஸ்ட்மென்ட்:

காதல் அல்லது வாழ்க்கை துணை என்ற உறவை காப்பாற்றுவதற்காக மட்டுமே காம்ப்ரமைஸ் மற்றும் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டு வாழ்வது அக்கறையற்ற உறவில் இருக்கும்போது நடக்கும் பொதுவான விஷயம். உங்களைப் புண்படுத்தும் பல விஷயங்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பீர்கள். ஆனால் இந்த நிலையில் உண்மையில் எது சிறந்தது தெரியுமா? வாழ்க்கையில் நீங்கள் விரும்புவதை உணர்ந்து தனிமையில் இருப்பது தான்.

பழைய காதல் வாழ்க்கை புதிய உறவில் இணையத் தடையாக இருக்கிறதா ?

உங்களை நீங்களே நேசிக்க மறப்பது :

சில நேரங்களில் மகிழ்ச்சி அளிக்காத உறவில் நீங்கள் இருக்கும் போது , உங்கள் மரியாதையை இழக்கிறீர்கள். இருந்தும் நீங்கள் அந்த நபருடன் தொடர்ந்து இருக்க விரும்புகிறீர்கள். முடிவில் உங்களை நேசிக்க நீங்களே மறந்து விடுகிறீர்கள். இதுமாதிரியான தருணங்களில் உங்களை நீங்களே கேட்டு கொள்ள வேண்டிய ஒரே கேள்வி "இது நமக்கு தேவையா"?

எல்லோரிடமிருந்தும் தனிமை :

கொரோனா மட்டுமல்ல உங்களை கஷ்டப்படுத்தும் ஒரு உறவும் உங்களை அனைவரிடமிருந்தும் தனிமைப்படுத்தி விடுகிறது. சுதந்திரத்தைத் தடுக்கும் ஒருவருடன், உடைமை மற்றும் பாதுகாப்பற்ற ஒருவருடன் இருக்கும் நிலை என இது வரையறுக்கப்படுகிறது. இதுமாதிரியான நிகழ்வு துவக்கத்தில் உங்களுக்கு சரியானதாக தோன்றலாம். என் மீது உள்ள அதீத அன்பு காரணமாக தானே பார்ட்னர் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று சமாதானம் சொல்லி கொள்ளலாம்.



ஆனால் உங்கள் நண்பர்களுடன் கூட வெளியே செல்ல விடாத அளவிற்கு துணை உங்களை தனிமைபடுத்தினால் உங்கள் அடிப்படை சுதந்திரத்தை பறிப்பதாக அது அர்த்தமாகும். இப்படிப்பட்ட சூழலில் ஒரே நபருடன் எப்போதும் இருப்பதை தவிர்த்து வேறு ஏதாவது கேளிக்கை செயல்களில் ஈடுபடுங்கள். துணைக்கு உங்கள் எண்ணம் குறித்து புரிய வைக்க முயற்சித்து பலனளிக்காவிட்டால் உறவை விட்டு வெளியேறுவதே சிறந்தது.

நம்முடைய பொதுவான பிரச்சனை என்னவென்றால், நம்மை நாமே மிகக் குறைவாக எடைபோட்டு கொண்டு, வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் முதல் விஷயத்தை அப்படியே தொடர நினைப்பது. இந்த பழக்கத்தை ஏன் நிறுத்தக்கூடாது? உங்களுக்குத் தகுதியான ஒன்று கிடைக்கும் வரை காத்திருக்கலாமே.. அதாவது உங்களை துன்பப்படுத்தும் உறவு உங்களுக்கானதல்ல. இதை விட மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவருடன் நீங்கள் இணைவதற்கான சாத்தியத்தை நீங்கள் பெறவும் வாய்ப்புகள் இருக்குமே, உங்கள் வாழ்க்கையை வாழும் நீங்களே மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் என்ன பயன்? இதை பற்றி சிந்தியுங்கள்!.

 
Published by:Sivaranjani E
First published:
மேலும் காண்க