நீண்ட கோவிட் : அசிடிட்டி, பசியின்மை அறிகுறிகளே - எச்சரிக்கும் மருத்துவர்கள்!

நீண்ட கோவிட் - மாதிரி படம்

சுவாசப் பாதை மற்றும் நுரையீரலை பாதிக்கும் கோவிட் வைரஸ், அதன் வழியாக உடலின் அனைத்து பாகங்களையும் பாதிப்பதாகவும் மருத்துவர் குணால் தாஸ் கூறியுள்ளார்.

  • Share this:
கோவிட் வைரஸில் இருந்து மீண்டவர்களுக்கு அசிடிட்டி மற்றும் பசியின்மை இருந்தால் புறக்கணிக்க வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவில் சார்ஸ் கோவிட் 2 வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள், பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சிலருக்கு சில தொந்தரவுகள் 3 மாதங்கள் வரைக்கும் நீடித்திருக்கின்றன. இதற்கான காரணம் குறித்து நியூஸ் 18-க்கு விளக்கியுள்ள மருத்துவர்கள், லாங் கோவிட் வைரஸின் பாதிப்பு அறிகுறிகள் என தெரிவிக்கின்றனர். Decoding Long Covid என்ற சீரிஸில் தொடர்ந்து 15 நாட்களுக்கு கோவிட் வைரஸ் பாதிப்புகள் மற்றும் கவனிக்க வேண்டிய அறிகுறிகள் குறித்து மருத்துவர்களின் ஆலோசனைகள் நியூஸ் 18-ல் இடம்பெற உள்ளன,.

இதுதொடர்பாக மணிப்பால் மருத்துவமனையில் கன்சல்டன்ட் மற்றும் கேஸ்டிராலஜிஸ்ட் நிபுணராக இருக்கும் மருத்துவர் குனால்தாஸ் பேசும்போது, லாங் கோவிட் பிரச்சனை வாயு மற்றும் குடல் தொல்லைகளை ஏற்படுத்தும் என்றும், பசியின்மை, அமிலத் தன்மையால் ஏற்படும் பிரச்சனைகளை புறக்கணிக்க வேண்டாம் என கூறியுள்ளார். இவையனைத்தும் கோவிட் வைரஸின் பக்கவிளைவுகள் என விளக்கம் அளித்துள்ளார். ஒரு சிலருக்கு குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை இருப்பதாக கூறியுள்ள அவர், பிளேக் நோயில் இருந்து குணமான கோவிட் நோயாளிகளுக்கு, டெஸ்டில் நெகடிவ் ரிசல்ட் வந்தபிறகு 3 மாதங்கள் வரை மேற்கூறிய பாதிப்புகள் இருப்பதாக ஆய்வுகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

Also Read:   தினமும் 2 பழங்கள் மற்றும் 3 காய்கறிகள் சாப்பிட்டால் நீண்ட நாள் வாழலாம் - ஹார்வர்ட் ஆய்வில் தகவல்!

சுவாசப் பாதை மற்றும் நுரையீரலை பாதிக்கும் கோவிட் வைரஸ், அதன் வழியாக உடலின் அனைத்து பாகங்களையும் பாதிப்பதாகவும் மருத்துவர் குணால் தாஸ் கூறியுள்ளார். கோவிட் வைரஸில் இருந்து குணமான 60 விழுக்காட்டினருக்கு கேஸ்டிராலஜி தொடர்பான பிரச்சனைகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இரண்டாவது அலையில் கோவிட் வைரஸ் பாதிப்புக்குள்ளான பெரும்பாலானோருக்கு குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை இருப்பதை பார்க்க முடிந்ததாகவும், லான்சட் கேஸ்டிரோ ஹெப்டால் இதழில் வெளியான ஆய்வில், டிஸ்ஜார்ஜான 44 விழுக்காட்டினருக்கு வாயுத்தொல்லை தொடர்பான விளைவுகள் இருந்ததாக தெரிவித்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் நோயாளிகளுக்கு வாயுத்தொல்லை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஹைபோக்ஸியாவாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ள லான்சட் மருத்துவ இதழ், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளின் விளைவாக இருக்கலாம் எனக் கூறியுள்ளது. ரத்த ஒட்டத்தில் ஏற்படும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, நிமோனியாவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், இது வாயுத்தொல்லைகளின் தொடர்ச்சியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லான்சட் இதழின்படி, வாயுத்தொல்லை தொடர்பான பிரச்சனைகள் கோவிட் நெகடிவ் ரிசல்ட் வந்த 3 மாதங்களில் எப்போது வேண்டுமானலும் எழலாம் என்றும், அவர்களுக்கு சுவாசம் சார்ந்த பிரச்சனைகள் இருக்கும் எனவும் கூறியுள்ளது.

Also Read:   கொரோனா தொற்றிலிருந்து விரைவாக குணமடைய உதவும் சில யோகா ஆசனங்கள்!

ஆன்டாக்சிட்கள், ஆன்டி-எமெடிக்ஸ் மற்றும் வயிற்றுப்போக்கு எதிர்ப்பு மாத்திரைகளே இதற்கு போதுமான மருத்துவம் எனக் கூறியுள்ள குணால்தாஸ், பெரிய அளவிலான பரிசோதனை மற்றும் ஆன்டிபாடிகளின் பயன்பாடு தேவையில்லை எனக் கூறியுள்ளார். கடுமையான வயிற்றுப்போக்கு, அடிவயிறு வலி, வாந்தி, ரத்தக்கட்டிகள் ஆகியவை உருவானால் தாமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள அவர், உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
Published by:Arun
First published: