கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் 6 மாதத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கின்றனர்: ஆய்வில் தகவல்!

தடுப்பூசி தொடர்பான பல ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டிருந்தாலும், தற்போது பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான தடுப்பூசிகள் கடுமையான தொற்று மற்றும் மரணத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது.

Advertisement
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்களில் கோவிட் வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தது ஆறு முதல் ஏழு மாதங்கள் வரை நீடிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆனால் குணமடைந்த 20% முதல் 30% மக்கள் 6 மாதங்களுக்குப் பிறகு இந்த நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வை ஜெனோமிக்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம் (Genomics and Integrative Biology) நடத்தியுள்ளது.

மேலும் இது குறித்து ஐஜிஐபி இயக்குனர் டாக்டர் அனுராக் அகர்வால் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, "எங்களது முக்கிய கண்டுபிடிப்பு என்னவென்றால், கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 20 முதல் 30% பேர் தொடக்கத்தில் செரோபோசிட்டிவ் ஆக இருந்தாலும், 6 மாத பின்தொடர்தலில் வைரஸ்-நடுநிலைப்படுத்தும் செயல்பாட்டை இழந்துள்ளனர். இதுவே, கொரோனாவின் பெரிய இரண்டாவது அலை ஏன் மும்பை போன்ற நகரங்களை அதிக செரோபோசிட்டிவிட்டி கொண்டதாக விடவில்லை என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

செரோபோசிட்டிவிட்டி என்பது ஒரு குறிப்பிட்ட ஆன்டிஜெனுக்கு எதிராக கண்டறியக்கூடிய ஆன்டிபாடிகளைக் கொண்டிருப்பது ஆகும். அதாவது ஒருவர் பாதிப்புக்கு பிறகு தனது உடலில் வைரசுக்கு எதிராக ஆன்டிபாடிகளை கொண்டிருக்கிறார் என்பது இதன் பொருள். இது இரத்த பரிசோதனை (செரோலாஜிக் சோதனை) மூலம் அளவிடப்படும். அதிலும், இந்த நேரத்தில் இந்த ஆராய்ச்சி மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று சொல்லலாம். ஏனெனில் தற்போது நாடு கொடிய வைரஸின் இரண்டாவது அலைகளின் பிடியில் சிக்கியுள்ளது. மேலும், இது தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.தடுப்பூசி தொடர்பான பல ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டிருந்தாலும், தற்போது பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான தடுப்பூசிகள் கடுமையான தொற்று மற்றும் மரணத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் மும்பை மற்றும் டெல்லியில் தற்போதைய திடீர் அதிகரிப்பை விளக்க உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மேற்கண்ட நகரங்களில் வசிக்கும் மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு எதிராக அதிக செரோபோசிட்டிவிட்டி அதாவது நோய்எதிர்ப்பு சக்தியை கொண்டிருந்தாலும், நகரம் இரண்டாம் அலை பாதிப்பின் கூர்மையான அதிகரிப்பை கண்டு வருகின்றன.

அறிக்கையின்படி, ஜனவரி மாதத்தில் டெல்லியில் சராசரியாக 56% மக்களிடையே செரோபோசிட்டிவிட்டி இருப்பது கண்டறியப்பட்டது. தீபாவளிக்கு பிந்தைய எழுச்சிக்குப் பின்னர் தொற்றுநோய் குறைவதற்கு இதுவே காரணம் என்று டெல்லி நகர மருத்துவர்கள் நம்பினர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, டெல்லியில் 10,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டது. மும்பையில் வார இறுதியில் சுமார் 9,327 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டன.

புதிய அறிகுறிகளுடன் அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் 2-வது அலை - முதல் அலையில் இருந்து எவ்வாறு வித்தியாசப்படுகிறது

இதற்கிடையில் தற்போது எடுக்கப்பட்ட டெஸ்டில் செரோபாசிட்டிவிட்டி, பாசிட்டிவிட்டி விகிதத்திற்கு எதிர்மறையான விகிதாசாரத்தில் உள்ளது என்பதையும் ஐ.ஜி.ஐ.பி ஆய்வு நிறுவியுள்ளது. அதாவது, ஆன்டிபாடிகளின் (நோய் எதிர்ப்பு சக்தி) அதிக அளவு பரவல் சரிவைக் கண்டுள்ளது. இது தொடர்பாக ஐ.ஜி.ஐ.பியின் மூத்த விஞ்ஞானி மற்றும் ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரான டாக்டர் சாந்தனு சென்குப்தா கூறியதாவது, “செப்டம்பரில், CSIR (Council for Scientific and Industrial Research) ஆய்வகங்களில் நாங்கள் ஒரு செரோ-கணக்கெடுப்பை நடத்தியபோது, பங்கேற்பாளர்களில் 10% க்கும் அதிகமானோர் வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகளை கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.பின்னர், இந்த பங்கேற்பாளர்களில் ஒரு பகுதியை நாங்கள் மூன்று மற்றும் ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரை பின்தொடர்ந்தோம். அவர்களின் ஆன்டிபாடி அளவை சரிபார்க்க ஒரு அளவு சோதனை நடத்தினோம். ஐந்து முதல் ஆறு மாதங்களில், பங்கேற்பாளர்களில் 20 சதவிகிதத்தினர் ஆன்டிபாடிகளை கொண்டிருந்த போதிலும் அவை நடுநிலைப்படுத்தல் செயல்பாட்டை இழந்துவிட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டது" என்று கூறியுள்ளார். நடுநிலைப்படுத்தல் என்பது உடலில் உள்ள ஆன்டிபாடி ஒரு வைரஸைக் கொல்லும் அல்லது ஒரு கலத்திற்குள் வைரஸ் நுழைவதை முற்றிலுமாகத் தடுக்கும் திறன் ஆகும்.

 
Published by:Sivaranjani E
First published:
மேலும் காண்க