கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் போது தடுப்பூசி போட்டு கொள்ளலாமா?

தடுப்பு மருந்தை தங்கள் உடலில் செலுத்தி கொள்ள இன்னும் பலரும் விரும்பாமல் இருக்கின்றனர்

Advertisement
கொரோனா இரண்டாம் அலை நாட்டில் தீவிரமாகி உள்ள நிலையில் தடுப்பூசி திருவிழா மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனினும் இன்னும் பலருக்கு தடுப்பூசி குறித்த பயமும், சந்தேகமும் தெளியவில்லை. எனவே தடுப்பு மருந்தை தங்கள் உடலில் செலுத்தி கொள்ள இன்னும் பலரும் விரும்பாமல் இருக்கின்றனர். எனினும் இரண்டாம் அலையில் தீவிரம் காரணமாக பொருளாதார சூழல் காரணமாக அன்றாடம் வெளியில் செல்லும் பலரும் சமீப நாட்களாக தடுப்பூசி போட்டு கொண்டு வருகின்றனர். தடுப்பூசி குறித்த சில சந்தேகங்களுக்கான பதிலை மருத்துவர் ராமன் கங்ககேத்கர் கூறி உள்ளார்.

தடுப்பூசி தவறாகப் பயன்படுத்துதல், அஸ்ட்ராஜெனெகா மற்றும் அரிதான ரத்த உறைவு ஆகியவற்றுக்கு இடையிலான உறவு மற்றும் குழந்தைகள் மீது கோவிட்-19னின் புதிய மாறுபாட்டின் தீவிரம் குறித்தும் விளக்கம் தந்துள்ளார்.

கொரோனா பாசிட்டிவ் நோயாளி தடுப்பூசி எடுத்துக் கொண்டால்?

கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரது உடல் அதற்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இந்த சமயத்தில் அவர் தடுப்பூசி எடுக்கும் போது, நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்காது. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெறும் போது ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வது முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.உருமாறிய கோவிட்-19 குழந்தைகளை மோசமாக பாதிக்கிறதா?

வைரஸ்கள் எப்போதுமே மாறிக்கொண்டே இருக்கும் தன்மை உடையது. இத்தகைய கொரோனாவும் விதிவிலக்கல்ல. தற்போது உருமாறிய கொரோனாவின் தாக்கமும் நாட்டின் பல இடங்களில் உள்ளது. வகுப்புகள் இல்லாத நிலையில் குழந்தைகள் பொதுவாக வீட்டில் இருந்தாலும், அவர்களைச் சுற்றியுள்ள பெரியவர்களிடமிருந்து வைரஸ் தொற்று ஏற்படுகிறது. கடந்த வருடம் அனைவரும் லாக்டவுனில் இருந்ததால் குழந்தைகளிடம் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் பெரிய வகுப்பு மாணவர்கள் மீண்டும் பள்ளிகளுக்கு திரும்பியதால் இவர்களில் சிலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நோயின் தீவிரம் குழந்தைகளில் குறைவாக உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் அறிகுறியில்லாமல் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் மருத்துவர் ராமன்.

தடுப்பூசிக்கு பிறகு கொரோனா ஆன்டிபாடி சோதனை அவசியமா?

தடுப்பூசியின் முதல் அல்லது இரண்டாம் டோஸிற்கு பின் பக்க விளைவுகள் மிகவும் கடுமையானதா?

தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டு கொண்ட பிறகு பக்க விளைவுகள் குறைந்த தீவிரம் மற்றும் முதல் டோஸுடன் ஒப்பிடும்போது குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும்.

கோ-வின் போர்ட்டலில் பதிவு செய்த ஒருவர் தனது முதல் அல்லது 2-வது தடுப்பூசி தேதியை தவறவிட்டால்.?

முதல் டோஸை தவறவிட்டால் மீண்டும் பதிவு செய்ய ஒரு வழி உள்ளது. இரண்டாவது டோஸிற்கான தேதியை தவறவிட்டால், அதை மீண்டும் திட்டமிட ஒரு ஏற்பாடு உள்ளது.தடுப்பூசி தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க அரசின் நடவடிக்கை என்ன?

சமீபத்தில் டெல்லியில் உள்ள 2 நிறுவனங்கள் 45 வயதிற்குட்பட்டவர்களை சிலரை சுகாதார பணியாளர்களாக காட்டி அவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கியது கண்டறியப்பட்டது. இடையில் பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. எனவே தடுப்பூசி தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, கோ-வின் போர்ட்டல் மூலம் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள் பதிவு செய்யும் முறையை அரசாங்கம் நிறுத்தியது. இதற்கு பதிலாக, இப்போது இவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற இடத்தில் பதிவு செய்யலாம், அங்கு அவர்கள் சுகாதாரப் பாதுகாப்பு அல்லது முன்னணி ஊழியர்கள் என்பதை ஆதரிப்பதற்கான ஆவணங்களைக் காட்ட வேண்டும்.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி நுரையீரல் / இதயத்தை பாதிக்குமா.?

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி மற்றும் ரத்த உறைவு பிரச்சனைக்கு இடையிலான உறவு இன்னும் ஆராயப்பட்டு வரும் நிலையில், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி நுரையீரலையோ அல்லது இதயத்தையோ பாதிக்காது. மேலும் இது மிகவும் அரிய சந்தர்ப்பங்களில், பெருமூளை த்ரோம்போசிஸுடன் மட்டுமே தொடர்புடையது. இதன் காரணமாக தடுப்பூசி டோஸ் எடுத்து கொள்ளும் சிலருக்கு கடுமையான தலைவலி வரும். மேலும் குறிப்பிட்ட நபர் தலையை குனிய முயன்றால் தலைவலியின் தீவிரம் சற்று அதிகரிக்கும். ஆனால் இந் நிகழ்வு இந்தியர்களிடையே மிகவும் அரிதானது.

RT-PCR சோதனை உருமாறிய வைரஸை துல்லியமாக கண்டறிகிறதா?

RT-PCR மூலம் வைரஸின் மரபணுக்கள் கண்டறியப்படுகிறது. COVID நோய்த்தொற்று என்று உறுதிப்படுத்த குறைந்தபட்சம் 2 மரபணுக்கள் தேவை. ஆனால் உருமாறிய வைரஸ் ஒருவேளை பல பிறழ்வுகளைக் குவித்தால், உடலில் வைரஸ் தொற்று இருந்தாலும் கூட சோதனை எதிர்மறையாக வர வாய்ப்புள்ளது.

Corona Vaccine, Covaxin, Covishield

வைரஸ் தீவிரமாக பரவும் போது ஒருவர் எவ்வாறு தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும்?

இதற்கு சிறந்த வழி தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதாகும். ஆரோக்கியமான உணவுமுறை, பொதுவெளிக்கு செல்லும்போது மாஸ்க் அணிவது, கூட்டமிக்க இடங்களில் உரிய சமூக இடைவெளியை பின்பற்றுவது மேலும் உரிய வயது தகுதி உடையவராக இருப்பின் தடுப்பூசி பூட்டு கொள்வது உள்ளிட்டவை நோயிலிருந்து ஒருவர் தன்னை தற்காத்து கொள்ள செய்ய வேண்டியவை.

 
Published by:Sivaranjani E
First published:
மேலும் காண்க