நாவில் வைத்ததும் கரையும் மாம்பழ அல்வா : செய்முறை இதோ...

நாவில் வைத்ததும் கரையும் மாம்பழ அல்வா : செய்முறை இதோ...
மாம்பழ அல்வா
  • Share this:
இது மாம்பழ சீசன் இல்லை என்றாலும் உங்கள் வீட்டில் மாம்பழ மரம் இருந்தால் அல்லது மாம்பழம் கிடைத்தால் அதில் அல்வா செஞ்சு பாருங்க...நல்ல சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

பழுத்த மாம்பழம் - 1 கப்


கோதுமை மாவு - 2 tbsp
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய் - 1/4 tspஉப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 1/4 கப்
முந்திரி - 5செய்முறை :

மாம்பழத்தின் தோலை நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

கடாய் வைத்து நெய் ஊற்றுங்கள். சூடானதும், முந்திரியை வறுத்துக்கொள்ளுங்கள். அதை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

மீண்டும் அதே கடாயில் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கோதுமை மாவை சேர்த்து பிரட்டுங்கள். தீ மிதமாக இருக்க வேண்டும்.

பிரட்டியதும் அரைத்த மாம்பழத்தை சேர்த்து பிரட்டுங்கள்.

சப்பாத்திக்கு அருமையாக இருக்கும் கடாய் மஷ்ரூம் - செய்முறை இதோ...

சதை நிறம் மாறும் வரை, சுருங்கும் வரை அடிபிடிக்காமல் பிரட்டிக்கொண்டே இருங்கள்.

சற்று கெட்டிப் பதம் வந்ததும் சர்க்கரை சேர்த்து கலக்குங்கள்.

மீண்டும் நன்கு பிரட்ட கொஞ்சம் உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

நன்கு சுருங்கி அல்வா போல் ஆனதும் முந்திரியை சேர்த்து ஒரு ஸ்பூன் நெய்யை சுற்றிலும் விட்டு பிரட்டி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

மாம்பழ அல்வா தயார்.
First published: August 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading