மாலை நேரம் ருசித்து சுவைக்க செய்து பாருங்கள்...கிராமத்து புட்டு

மாலை நேரம் ருசித்து சுவைக்க செய்து பாருங்கள்...கிராமத்து புட்டு!

 • Share this:
  உங்கள் மாலை பொழுதை உணவுடன் இனிமையாக்க செய்து பாருங்கள் கிராமத்து புட்டு

  செய்யத் தேவையான பொருட்கள் :

  • பச்சரிசி - 4 கப்

  • தேங்காய் துருவல் - 2 கப்

  • வெல்லத்தூள் - 2 கப்

  • நெய் - 3 டேபிள் ஸ்பூன்

  • ஏலக்காய் தூள் - 2 டீஸ்பூன்

  • முந்திரி, வேர்க்கடலை , உரித்த பரங்கிக்காய் விதை - தலா 2 டேபிள் ஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு


  செய்முறை :

  • அரிசியை 4 மணி நேரம் ஊறவிட்டு கழுவி நீரை வடித்துவிட்டு ஈரமாவு அரைக்கும் மிஷினில் கொடுத்து அரைத்து கொள்ளவும்.

  • மாவை நன்றாக சலித்து வெறும் கடாயில் பொன்னிறமாக வறுக்கவும். கொஞ்சமாக உப்பு கரைத்த நீரை ஆறிய மாவில் தெளித்து புட்டு மாவு போல் பிசிறி பத்து நிமிடம் மூடி வைக்கவும்

  • பிறகு அதில் தேங்காய் துருவலை கலந்து ஆவியில் வேக விடவும். இடையிடையே கிளறி, தேவையானால் நீர் தெளித்து மூடி வைக்கவும்.

  • வெந்ததும் இறக்கி வெல்லத்தை கெட்டிப்பாகு வைத்து ஊற்றி கிளறவும்.

  • நெய், தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்க்கவும்

  • முந்திரி தோல் நீக்கி, உடைத்த வேர்க்கடலை, பரங்கிக் காய் விதை ஆகியவற்றை நெய்யில் வறுத்துக் கொட்டவும்


  கமகம வாசனையில் கிராமத்து புட்டு ரெடி
  Published by:Sankaravadivoo G
  First published: