வித்தியாசமான சுவையில் ’ஆப்பிள் ரசம்’ ; சும்மா டிரை பண்ணி பாருங்க...!

மிளகு ரசம், தக்காளி ரசம், பருப்பு ரசம் என செய்து அலுத்து போனால் இப்படி டிரை பண்ணி பாருங்க

வித்தியாசமான சுவையில் ’ஆப்பிள் ரசம்’ ; சும்மா டிரை பண்ணி பாருங்க...!
ஆப்பிள் ரசம்
  • Share this:
மிளகு ரசம், தக்காளி ரசம், பருப்பு ரசம் என செய்து அலுத்து போய் விட்டதா..? இப்படி வித்தியாசமாக ஆப்பிள் ரசம் செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள் 

ஆப்பிள் - 1/2 கப்


ரசப்பொடி - 1 tsp
மிளகு - 1 tbsp
சீரகம் - 1 tbspபூண்டு - 5 பற்கள்
தக்காளி - 1
புளி - சின்ன எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி - 1/2 tsp
கொத்தமல்லி - சிறிதளவு

தாளிக்க

நெய் - 1 tsp
எண்ணெய் - 1 tbsp
கடுகு - 1 tsp
சீரகம் - 1 tsp
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை



செய்முறை

புளியை ஊற வைத்துக்கொள்ளுங்கள். ஆப்பிளை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

மிளகு மற்றும் சீரகத்தை அரைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு பூண்டு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

கடாய் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி கடுகு சேர்த்து பொறிக்கவும். சீரகம் சேர்க்கவும். காய்ந்த மிளகாய் போடவும்.

சப்பாத்திக்கு அருமையாக இருக்கும் கடாய் மஷ்ரூம் - செய்முறை இதோ...

பின் தக்காளியை கைகளால் கசக்கிப் போட்டு வதக்கவும். பெருங்காயத்தூள் சேர்க்கவும். கறிவேப்பிலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வதக்கிய பின் நறுக்கிய ஆப்பிளை சேர்த்து வதக்கவும். குறைந்த தீயில் 4 நிமிடங்களுக்கு வதக்குங்கள்.

பின் கரைத்த புளித்தண்ணீரை ஊற்றுங்கள். மஞ்சள் பொடி சேருங்கள். அடுத்ததாக அரைத்த மிளகு, சீரகத்தை சேர்க்கவும். போதுமான உப்பு சேர்த்துக்கொண்டு கலக்குங்கள்.

புள்ளிப்பு சுவைக்கு ஏற்ப போதுமான தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். இறுதியாக கொத்தமல்லி தழைகளை போட்டு கொதிக்க வையுங்கள்.

கொதித்து நுரை வரும்போது வரும் முதல் கொதியில் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் ஆப்பிள் ரசம் தயார்.

 

 

 

 
First published: August 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading