எந்த வகை மாம்பழம் அதிக சுவை மிக்கது? ட்விட்டரில் விவாதம் நடத்திய மாம்பழ பிரியர்கள்! ட்ரெண்டாகும் #Mangowar ஹாஷ்டாக்

வெயில் சீசன் ஆரம்பிக்கும் போதே மக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் மாம்பழ சீசனும் ஆரம்பித்துவிடும். இந்த பழம் இந்தியா முழுவதும் பல வடிவங்கள், அளவுகள், சுவைகள் மற்றும் வகைகளில் கிடைக்கிறது.

Advertisement
நாடு முழுவதும் கோடைகாலம் ஆரம்பமான இந்த காலகட்டத்தில், மக்கள் அனைவரும் வியர்வை, உடலில் நீரிழப்பு, அதிக வெயில் போன்றவற்றை சமாளிக்க வேண்டியிருக்கிறது. அதேசமயம், இந்த காலகட்டத்தில் மக்கள் அனைவரும் நீரேற்றத்துடன் இருக்க அதிக தண்ணீர் மற்றும் நீர்சத்து மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட சொல்லுவார்கள். அதன்படி இந்த காலங்களில் இளநீர், தர்பூசணி, முலாம்பழம் போன்ற பல நீர்சத்துக்கொண்ட பழ வகை பானங்களை மக்கள் அதிகம் அருந்துகிறார்கள்.

அதேபோல வெயில் சீசன் ஆரம்பிக்கும் போதே மக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் மாம்பழ சீசனும் ஆரம்பித்துவிடும். இந்த பழம் இந்தியா முழுவதும் பல வடிவங்கள், அளவுகள், சுவைகள் மற்றும் வகைகளில் கிடைக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு பழம் என்றால் அது மாமபழம் தான். எவ்வாறாயினும், ட்விட்டரில் தற்போது மாம்பழத்தால் ஒரு யுத்தமே வெடித்ததாகத் தெரிகிறது. இதனால் இப்போது #MangoWars என ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. அதில், எந்த வகையான மாம்பழம் சிறந்தது என்பதை நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.

இந்தியா முழுவதும் ஏராளமான மாம்பழங்கள் பயிரிடப்படுகின்றன. அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் அல்போன்சா மாம்பழங்களுக்கு பிரபலமானது என்றாலும், உத்தரபிரதேசம் துஷேரி மாம்பழ வகைக்கு பெயர் பெற்றது. மேற்கு வங்கம் ஹிம்ஸாகர் மாம்பழங்களை வளர்ப்பதில் பிரபலமானது. ஆந்திரா இலகுவான சஃபெடா மாம்பழங்களுக்கு பெயர் பெற்றது. அ

தேபோல இந்தியாவில் பிற பிரபலமான மாம்பழ வகைகளில் சாவுசா, லெங்க்ரா, கேசர், டோட்டாபுரி, நீலம்,மல்கோவா மற்றும் பல வகைகள் உள்ளன. ஆனால் இவற்றில் எந்த வகையான மாம்பழங்கள் அதிக சுவை கொண்டது என்பது குறித்து ட்விட்டரில் மாம்பழ பிரியர்கள் பல விவாதங்களை நடத்திய பிறகும் இன்னும் ஒரு தீர்மானத்திற்கு வரமுடியவில்லை.

இரசாயன கலப்படம் இல்லாத மாம்பழம்... கண்டறிவது எப்படி?

சமீபத்தில் ட்விட்டர் யூசர் ஒருவரின் பதிவுதான் சமூக வலைத்தளத்தில் இந்த போருக்கே வழிவகுத்துள்ளது. அதில் அவர் கூறியிருந்ததாவது, "அல்போன்சோ மிக அதிகமாக மதிப்பிடப்பட்ட ஒரு பொருள் என்றும் அதற்கு மட்டுமே ஒரு சுவை இருப்பதாக பலர் நம்பியிருப்பதாகவும், ஒரு அசல் மாம்பழத்தின் சுவையை பற்றி அல்போன்சா அறிந்திருக்கவில்லை. தசஹரி, சவுசா, சஃபெடா மற்றும் அல்டிமேட் லாங்டா / மால்டாவை சுவைத்து பார்க்க வேண்டும்." என்று கூறியபோது தான் இந்த விவாதம் தொடங்கியுள்ளது.

https://twitter.com/YRDeshmukh/status/1381131183476588552

இந்த ட்வீட் ட்விட்டரில் ஒவ்வொரு மாநிலத்தின் மிகச் சிறந்த மாம்பழம் குறித்து ஒரு போரைத் தொடங்கியது. அதிலும் அல்போன்சா மாம்பழங்களுக்கு பலர் வாக்களித்தனர். மேலும் சிலர் மற்றவகை மாம்பழங்களுக்கு வாக்களித்துள்ளனர். ஒருசிலர் பங்கனபள்ளி மாம்பழத்திற்கும், குஜராத்தின் கேசர் மாம்பழத்திற்கும் வாக்களித்து வந்தனர்.

https://twitter.com/bombaywallah/status/1381176958873141251

https://twitter.com/_yadavsurendra/status/1381172748538417154

https://twitter.com/dilluu1/status/1381174727562067968

https://twitter.com/Savio309/status/1381174781878226944

இதில் வெற்றியாளர் என்னவோ அனைத்து வகையான மாம்பழங்களும் தான். இவை மட்டும் தான் சுவை என்று சொல்ல முடியாது. அனைத்து வகை மாம்பழங்களும் அதன் தனித்துவமான சுவையில் இருக்கும். மாம்பழங்கள் இந்தியாவில் மிகவும் பிரபலமான பழங்களில் ஒன்றாகும். 2018-19 பயிர் ஆண்டில் (ஜூலை-ஜூன்) மாம்பழத்தின் உற்பத்தி சுமார் 21.37 மெட்ரிக் டன் ஆகும். அப்படியானால், உங்களுக்கு பிடித்த மாம்பழ வகை எது?.

 

 
Published by:Sivaranjani E
First published:
மேலும் காண்க