ஒர்க் ஃபிரம் ஹோமுக்கு தேவையான இந்த பொருட்களையெல்லாம் வாங்கிட்டீங்களா?

Advertisement
2019-ம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா உலகளவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தடுப்பூசி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இயல்பு நிலைக்கு திரும்பிய நாடுகள் மீண்டும் முழு முடக்கத்தை நோக்கி பயணிக்கின்றனர். பல்வேறு நிறுவனங்களும் உற்பத்தியை தொடங்கிய நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் தொடர்ந்து நடத்த முடியாமல் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஊழியர்களும் தற்போது வீட்டில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதால், வீட்டில் இருந்தே வேலை (Work From Home) என்ற ஆப்சனை ஐ.டி உள்ளிட்ட நிறுவனங்கள் மீண்டும் கையில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

கடந்த ஊரங்கின்போது ஓரளவு ஊழியர்கள் மட்டுமே Work From Home -ல் வேலை செய்தனர். காரணம், பலருக்கும் வேலை செய்வதற்கான செட்டப் அவர்களது வீட்டில் இல்லை. இந்நிலையில், மீண்டும் Work From Home என்ற ஆப்சன் சூடுபிடிக்க இருப்பதால், அதற்கான செட்டப்பை உங்கள் வீட்டில் உடனடியாக அமைக்க தயாராகுங்கள். ஒருவேளை உங்களுக்கு அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், வீட்டில் இருந்து வேலை செய்தால் அடிப்படையாக என்னென்ன பொருட்கள் வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

இன்டர்நெட் சர்வீஸ்

வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு கண்டிப்பாக தேவைப்படுவது இன்டர்நெட் சர்வீஸாகும். ஊடகம், ஐ.டி நிறுவனம், கன்சல்டன்ட் உள்ளிட்ட எந்த துறையில் நீங்கள் பணியாற்றுபவராக இருந்தாலும், வீட்டில் இருந்து வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், நல்ல இன்டர்நெட் வசதி உங்களிடம் இருக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் உங்களின் புராஜெக்டை அனுப்ப வேண்டிய தேவை இருக்கும் என்பதால், நல்ல இன்டர் நெட் வசதி இருந்தால் மட்டுமே அதனை முழுமையாக அனுப்ப முடியும். ஆகையால், நல்ல ஸ்பீடுடன் இருக்கக் கூட இணைய வசதியை வீட்டில் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆபீஸ் ஸ்பேஸ்

வீட்டில் இருந்து வேலை செய்கிறோம் என்பதால், ஆபிஸ் போன்ற செட்டப்பை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. அங்கு நீங்கள் அமர்ந்து வேலை பார்க்கும் அளவுக்கான இடம் இருந்தாலே போதும். கவனச் சிதறல் ஏற்படாமல் உங்கள் வேலையில் மட்டுமே செய்வதற்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள். உங்கள் பெட்ரூம் சரியாக இருக்கும். வீட்டில் இருந்து வேலை செய்வதால் சில இடைஞ்சல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதற்கு இடம் கொடுக்காமல் உங்களுக்கான வேலையில் முழு கவனத்தையும் செலுத்துவதற்கு உகந்த இடமாக இருக்க வேண்டும்.



உடை

ஆபீஸ் செல்லும்போது பார்மல் சர்ட் அன்ட் பேன்ட் மற்றும் பெல்ட், டை எல்லாம் அணிந்து செல்வீர்கள். ஆனால் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு உங்களுக்கு அந்த உடைகள் எல்லாம் தேவையில்லை. ப்ரீயாக அமர்ந்து வேலை செய்வதற்கு ஏற்ற உடைகள் இருந்தால் போதும். ஷார்ட்ஸ், பைஜாமாஸ் மற்றும் லுங்கி என ரிலாக்ஷாக இருக்க கூடிய உடைகள் இருந்தால் போதும்.

நேரம்

வீட்டில் இருந்து வேலை செய்கிறோம் என்பதற்காக அசல்டாக இருந்துவிடக் கூடாது. சரியான நேரத்தில் ஆன்லைன் சென்று உங்களுடைய வேலைகளை தொடங்குவதை உறுதி செய்ய வேண்டும். காலை முதல் மாலை வரை உங்களுக்கு என்று இருக்கும் வேலை நேரத்தை அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். வீட்டில் இருப்பதால் மற்ற வேலைகளில் கவனம் செலுத்திவிட்டு, உங்கள் வேலைகளை செய்யலாம் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். புரொபஷனல் வேலைக்கு மட்டுமே உங்களின் முக்கியத்துவம் இருக்க வேண்டும்.

நாற்காலி

ஆபீஸில் வேலை பார்க்கும்போது உங்களுக்கு தகுந்த நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வீர்கள். ஆனால் வீட்டில் அதுபோன்ற நாற்காலி இருக்காது. வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், நிறுவனத்தில் இருப்பது போன்ற நாற்காலியை வாங்கிக் கொள்வதில் தவறில்லை. ஏனென்றால், நீண்ட நேரம் கீழே அமர்ந்து வேலை பார்க்கும்போது முதுகு தண்டவம் மற்றும் பின்பக்கத்தில் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எங்கு இருந்து வேலை செய்தாலும் ஆரோக்கியததில் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால், உங்களுக்க உகந்த நாற்காலியை வாங்கிக்கொள்வதில் தவறில்லை.



 

நோட் பேட்

நீங்கள் நாள்தோறும் செய்யும் வேலைகள் மற்றும் அது குறித்த விவரங்களை சிறு டைரி ஒன்றில் குறித்து வைத்துக் கொள்வது நல்லது. மேலும், அடுத்த நாளுக்கான திட்டமிடல் ஒன்றை வகுத்துக்கொள்ளுங்கள். தினசரி இந்த பழக்கத்தை கடைபிடித்து வந்தால் உங்கள் வேலையில் அடுத்த நிலையை நோக்கி முன்னேறுவதற்கு, தாயர்படுத்திக்கொள்வதற்கு இந்த டைரி குறிப்புகள் உதவும். மேலும், தவறுகள் நடந்தால் அதனை சரிசெய்துகொள்ளவும், முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் டைரியில் குறிப்பெடுப்பது உதவும்.

சிரிப்பு உண்மையில் சிறந்த மருந்தா..? சத்குரு விளக்கம்..!

லைட் செட்டிங்

வீட்டில் இருந்து வேலை செய்யும்போது போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒருவேளை வெளிச்சம் போதவில்லை என்றால் புதிய லைட் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். கம்பயூட்டர் முன்பு அமர்ந்து நீங்கள் வேலை செய்யும்போது, குறைவான வெளிச்சத்தில் வேலை செய்தால், கண்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. போதுமான வெளிச்சத்தில் அமர்ந்து வேலை செய்வதற்கு தேவையான பிரகாசமாக எரியக்கூடிய லைட் ஒன்றை வாங்கிக் வீட்டில் பொருத்திக் கொள்ளுங்கள்.



பைல்

உங்களுடைய வேலைகள் முழுவதும் காகிதமில்லா பணியாக இருந்தாலும், நாள் முழுவதும் செய்த வேலைய ஹார்ட் காபியாக பிரின்ட் எடுத்து சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏதாவதொரு நாளில் நீங்கள் அனுப்பிய பைல்கள் மூலம் பிரச்சனை ஏற்பட்டால், உங்களிடம் இருக்கும் ஹார்ட் காபி மூலம் மீண்டும் ஒருமுறை சோதித்துக்கொள்ள உதவியாக இருக்கும். உங்களிடம் தவறு நடக்காமல் இருந்தால் சுட்டிக்காட்டவும், தவறு நடந்திருந்தால் அதனை எளிமையாக திருத்துவதற்கும் நீங்கள் எடுத்துவைத்திருக்கும் பைல்கள் உதவும்.

 
Published by:Sivaranjani E
First published:
மேலும் காண்க