பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கண்டித்து பிலிப்பைன்சில் போராட்டம்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கண்டித்து பிலிப்பைன்சில் போராட்டம்
Image - CBC
  • Share this:
பிலிப்பைன்ஸ் அரசின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கண்டித்து தலைநகர் மணிலாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அங்குள்ள மாநில பல்கலைக்கழகத்தின் முன்பாக கூடிய நூற்றுக்கும் மேற்பட்டோர் புதிய சட்டத்தை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினர்.

பிலிப்பைன்ஸின் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே (Rodrigo Duterte) கடந்த வாரம் கையெழுத்திட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் படி சந்தேகப்படும் நபர்களை 24 நாட்கள் காவலில் வைத்திருக்க முடியும், இந்த சட்டத்தின் மூலம் சந்தேகப்படும் நபர்கள் அல்லது குழுக்களை கைது செய்யவும், கண்காணிக்கவும் பயங்கரவாத எதிர்ப்பு கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


Also read... வங்கிக்கடன்... வேலை நீக்கம்...! சென்னை ஐஐடி & சிறுகுறு தொழில் கூட்டமைப்பு ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்

இதனால் இந்த சட்டம் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படலாம் என அதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading