பாகிஸ்தான் நீதிமன்றத்தில் விசாரணையின் போது அமெரிக்க குடிமகன் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் மத நிந்தனை வழக்கின் விசாரணையில் நீதிமன்றத்தில் ஆஜரான ஒருவர், சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்

பாகிஸ்தான் நீதிமன்றத்தில் விசாரணையின் போது அமெரிக்க குடிமகன் சுட்டுக்கொலை
தாஹிர்
  • News18
  • Last Updated: July 30, 2020, 8:47 PM IST
  • Share this:
இஸ்லாமிய நாடாக உள்ள பாகிஸ்தானில் மத விமர்சனம் என்பது குற்றமாக உள்ளது. அமெரிக்க குடிமகனான தாகிர் நசீம் என்பவர், முகம்மது நபி தொடர்பாகவும், இஸ்லாம் தொடர்பாகவும் அவதூறாக பேசியதாக மரண தண்டனை விதிக்கும் வகையில், கடுமையான மத நிந்தனை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

பெஷாவர் நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனை ஒட்டி அங்கு கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தாகிர் நசீம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் பகுதியில் இருந்த ஒரு நபர், திடீரென எழுந்து தனது துப்பாக்கியால் தாகிர் நசீமை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் தாகீர் நசீம் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார். நீதிபதி முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தால் நீதிபதி உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயர் பாதுகாப்பு நிறைந்த நீதிமன்ற அறைக்குள் எப்படி துப்பாக்கியை கொண்டு வந்தார் என்பது தெரியவில்லை. இதுபற்றி விசாரணை நடைபெறுகிறது.

படிக்க: முழு ஊரடங்கு நீட்டிப்பு - எவற்றுக்கெல்லாம் தடை தொடர்கிறது...?

படிக்க: கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் அமெரிக்காவில் படுகொலை - கணவன் வெறிச்செயல்

படிக்க: ’ஆண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்’ ஹர்திக் பாண்டியாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்
சுட்டுக்கொல்லப்பட்டவர் அமெரிக்க குடிமகன் என்பதால், அவரின் குடும்பத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், அவரை சுட்டுக்கொன்ற குற்றவாளி மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், இதுபோன்ற மோசமான சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில், பாகிஸ்தான் அரசு சட்டத்தில் சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

தாஹிர் நசீம், பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள அஹமதியா சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading