சிங்கப்பூரில் இன்று வேட்புமனுத் தாக்கல்: ஜூலை 10-ம் தேதி பொதுத்தேர்தல்

சிங்கப்பூரின் பிரதமர் லீ ஹ்சியன் லூங்

சிங்கப்பூரில் பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.

  • Share this:
    சிங்கப்பூரின் 13-வது நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் ஹலிமா யாக்கோப் கடந்த 23 ஆம் தேதியன்று அறிவித்தார். இதையடுத்து இன்று பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று முற்பகல் 11 மணியிலிருந்து வேட்புமனுத் தாக்கல் நடைபெறும். அதைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

    சிங்கப்பூரில் 17 குழுத் தொகுதிகள், 14 தனித் தொகுதிகள் என மொத்தம் 93 தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கான வேட்புமனுக்கள் 9 வேட்புமனுத் தாக்கல் நிலையங்கள் மூலம் பெறப்படுகின்றன.

    மேலும் படிக்க...

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம்: பென்னிக்ஸ் பெயர் அச்சிட்ட முகக்கவசம் அணிந்த காங்கிரஸ் வழக்கறிஞர்கள்

    ஜூலை 9 ஆம் தேதி வரை பிரசாரம் செய்ய கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை 10 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vaijayanthi S
    First published: