டிக்டாக் உள்ளிட்ட சீன ஆப்களைத் தடை செய்ய அமெரிக்கா பரிசீலனை

டிக்டாக் உள்ளிட்ட சீன ஆப்களைத் தடை செய்ய அமெரிக்கா பரிசீலனை
டிக்-டாக்
  • Share this:
டிக்டாக் உள்ளிட்ட சீன சமூக வலைதள ஆப்களை தடை செய்ய பரிசீலித்துவருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

டிக்டாக், ஷேர்இட், யூசிப்ரோசர் உள்ளிட்ட 59 சீன ஆப்களைத் தடை செய்வதாக கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவின் இறையான்மை, தனிநபர் தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லையென்பதால் இந்த ஆப்களைத் தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. டிக்டாக்குக்கு இந்தியாவில் மிகஅதிக அளவில் பயனாளர்கள் இருந்தநிலையில், அது அந்த நிறுவனத்துக்கு மிகப்பெரிய அடியாக அமைந்தது.

இதுதொடர்பாக விளக்கமளித்த டிக் டாக்,‘நாங்கள் மத்திய அரசின் உத்தரவுக்கு கட்டுப்படுகிறோம். எங்களை அழைத்து விளக்கம் கேட்டால், அரசு தரப்பிடம் அனைத்துவிதமான விளக்கத்தையும் அளிக்க தயாராக இருக்கிறோம்.


இந்தியர்கள் உள்ளிட்ட யாருடைய தனிப்பட்ட தகவல்களையும் சீனா உள்பட எந்த வெளிநாட்டிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதை தெரிவிப்போம்’ என்று தெரிவித்திருந்தது. இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, ‘டிக்டாக் உள்ளிட்ட சீன சமூக வலைதளங்களைத் தடை செய்வது குறித்து பரிசீலித்துவருகிறோம்’ என்று தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் மோதல் போக்கை கடைபிடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading