உலகையே உலுக்கிய லெபனான் வெடி விபத்து - அதிர வைக்கும் வீடியோ காட்சிகள்

Lebanon Blast | பயங்கர வெடி விபத்தை தொடர்ந்து பெய்ரூட் நகரில் 2 நாட்களுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலகையே உலுக்கிய லெபனான் வெடி விபத்து - அதிர வைக்கும் வீடியோ காட்சிகள்
வெடிவிபத்து (Reuters )
  • News18
  • Last Updated: August 5, 2020, 7:09 AM IST
  • Share this:
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது.

வெடிவிபத்து தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவிய வீடியோக்கள் அச்சத்தையும், கவலையையும் ஒருசேர அளிப்பதாக இருந்தது. இந்த விபத்தில் தற்போது வரை 30 பேர் உயிரிழந்திருப்பதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.பெய்ரூட் நகரில் 2 நாட்களுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கி.மீ தூரங்களுக்கு பரவிய சேதங்களை கணக்கிடும் பணி மற்றும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.வெடி விபத்து நடந்த கட்டடத்தின் அருகே 3 மணி நேரத்திற்கு முன்னதாக தீ விபத்து ஒன்று நடந்துள்ளது. அந்த தீயை அணைக்கும் பணியில் இருந்தவர்கள், வெடிவிபத்தால் மாயமாகியுள்ளனர். அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் நீடிக்கிறது.

விபத்து தொடர்பாக லெபனான் அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading