செர்பியாவில் ஊரடங்கு பிறப்பித்த அதிபருக்கு எதிரான போராட்டம் - வன்முறையாக மாறியது

செர்பியாவில் இரண்டாவது நாளாக அதிபருக்கு எதிரான போராட்டம் நீடித்து வருகிறது.

செர்பியாவில் ஊரடங்கு பிறப்பித்த அதிபருக்கு எதிரான போராட்டம் - வன்முறையாக மாறியது
CREDIT: REUTERS
  • Share this:
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த அதிபருக்கு எதிராகத் திரண்ட மக்கள் செர்பியாவின் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைநகர் பெல்கிரேடில் அமைதியாகத் தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசாரை நோக்கி கற்களையும், பாட்டில்களையும் வீசி எறிந்த போராட்டக்காரர்களை சமாளிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

Also read... பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கண்டித்து பிலிப்பைன்சில் போராட்டம்


அப்போது ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். ஊரடங்கு அறிவிப்பிலிருந்து அதிபர் பின்வாங்கிய பின்னும் போராட்டங்கள் இரவிலும் தொடர்ந்ததால் செர்பிய நகரங்களில் பதற்றம் நிலவுகிறது.
First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading