சித்ரவதைக் கூடங்களை உருவாக்கிய கடத்தல் கும்பல்... அதிரடி ஆபரேஷன் மூலம் கைது செய்த நெதர்லாந்து போலீஸ்..

நெதர்லாந்தில் கண்டெய்னர்களை சித்ரவதைக் கூடங்களாக மாற்றி வைத்திருந்த ஆறு பேரை போலீசார் அதிரடி நடவடிக்கை மூலம் கைது செய்துள்ளனர்.

சித்ரவதைக் கூடங்களை உருவாக்கிய கடத்தல் கும்பல்... அதிரடி ஆபரேஷன் மூலம் கைது செய்த நெதர்லாந்து போலீஸ்..
CREDIT: REUTERS
  • Share this:
நெதர்லாந்தில் கண்டெய்னர்களை சித்ரவதைக் கூடங்களாக மாற்றி வைத்திருந்த ஆறு பேரை போலீசார் அதிரடி நடவடிக்கை மூலம் கைது செய்துள்ளனர்.

என்க்ரோ சாட் (Encro chat) எனப்படும் குற்றவாளிகளுக்கு இடையிலான ரகசிய தகவல் தொடர்பு நெட்வொர்க் கடந்த ஏப்ரல் மாதம் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 60,000 பேர் இதன் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு குற்றங்களைச் செய்து வந்தது கண்டறியப்பட்டது.

என்க்ரோ சாட் உரையாடல் ஒன்றை டீகோட் (Decode) செய்த போலீசார் கடத்தல் வேலைகளுக்காக ஒரு கும்பல் சித்ரவதைக் கூடங்களை நிறுவியுள்ளதை கண்டுபிடித்தனர்.

Also read... ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக உயர்வு - இன்றைய விலை நிலவரம் என்ன?

தென்மேற்கு நெதர்லாந்தில் பெல்ஜியம் எல்லைக்கு அருகில் உள்ள வூவ்ஸ் பிளாண்டேஜ் (Wouwse Plantage) கிராமத்திற்குச் சென்ற போலீசார் அதிரடி நடவடிக்கை மூலம் சித்ரவதைக் கூடங்களை உருவாக்கி வைத்திருந்த ஆறு பேரை கைது செய்தனர்.

கடத்தி வரும் நபர்களை அங்கு அடைத்து வைத்து சித்ரவதை செய்வதற்காக வைத்திருந்த இருக்கைகள், கை விலங்குகள், ஆயுதங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading