அமெரிக்க மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற அதிபர்கள் பட்டியலில் அதிபர் ட்ரம்புக்கு கடைசி இடம்.. முதலிடம் யாருக்கு?

அமெரிக்காவில் மக்கள் மத்தியில் அதிகம் செல்வாக்கு பெற்ற அதிபர்கள் பட்டியலில் தற்போதைய அதிபர் ட்ரம்புக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது.

அமெரிக்க மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற அதிபர்கள் பட்டியலில் அதிபர் ட்ரம்புக்கு கடைசி இடம்.. முதலிடம் யாருக்கு?
ஜார்ஜ் புஷ், ஜான் எஃப் கென்னடி, டொனால்டு ட்ரம்ப்
  • Share this:
நம்மூரைப் போலவே அமெரிக்காவிலும் குடியரசுக் கட்சி, ஜனநாயக கட்சி என இரண்டு கட்சிகளிலும் இருந்தும் மாறி மாறி அதிபர்கள் பதவி வகித்து வந்தாலும், இரு தரப்பிலுமே மக்களின் மனதைக் கவர்ந்த அதிபர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அமெரிக்காவில் இதுவரை 45 அதிபர்கள் ஆட்சி செய்துள்ளனர். இதில் செல்வாக்கான 14 பேரின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

மக்கள் மத்தியில் ஒரு அதிபர் பெற்றிருக்கும் செல்வாக்கைக் கணக்கிட 1937ம் ஆண்டு ஜார்ஜ் கேல்லப் என்பவர் புதிய முறையை அறிமுகம் செய்தார். இதன்படி 50 மாநிலங்களிலும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் அன்றாடம் ஆயிரம் பேரைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கிடைத்த முடிவுகளின்படி அதிபரையும், அவரது திட்டங்களையும் மக்கள் எந்த அளவிற்கு ஆதரிக்கின்றனர் என்பது கணக்கிடப்பட்டது.

Also read: ஹாலோவன் விழாவில் கலந்துகொண்டு, மாறுவேடமிட்ட குழந்தைகளை உற்சாகப்படுத்திய ட்ரம்ப்..


இந்த ஆய்வின்படி மக்களின் மனதை அதிகம் கவர்ந்த அதிபராக ஜார்ஜ் டபிள்யூ புஷ் முதலிடம் பிடித்துள்ளார். 2001ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான இவரது ஆட்சிக்கு மக்கள் 90 சதவீத ஆதரவை வாரி வழங்கியுள்ளனர். இவருக்கு அடுத்த இடத்தில் 89 சதவீத ஆதரவுடன் இருப்பவர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ். இவர் ஜார்ஜ் டபிள்யூ புஷின் தந்தையாவார். 1989 முதல் 1993 வரையில் அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ்ஷுக்கு செல்வாக்கான அதிபர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.மூன்றாம் இடத்தில் 87 சதவீத ஆதரவுடன் ஹேரி ட்ரூமனும், நான்காம் இடத்தில் ஜான் எஃப் கென்னடி 83 சதவீத ஆதரவுடனும் உள்ளனர். 14 அதிபர்கள் கொண்ட இந்தப் பட்டியலில் பில் கிளின்டன் (Bill Clinton) 9வது இடத்திலும், ரொனால்ட் ரீகன் 10 வது இடத்திலும் உள்ளனர். அமெரிக்காவின் ஒரே கறுப்பின அதிபரான ஒபாமா 12-வது இடத்தை பிடித்துள்ளார். ஒபாமாவுக்கு 67 சதவிகித மக்கள் ஆதரவளித்துள்ளனர்.

49 சதவீத மக்கள் ஆதரவைப் பெற்று கடைசி இடத்தில் இருப்பவர் தற்போதைய அமெரிக்க அதிபரான ட்ரம்ப் தான். ஆனால் இதுபோன்ற பட்டியல்கள், புள்ளி விவரங்களையெல்லாம் கிள்ளிக்கீரையாக மதிக்கும் ட்ரம்ப் வழக்கம்போல ஜோ பைடனை வசைபாடிக்கொண்டு பிரசாரத்தில் பிஸியாக இருக்கிறார்.
First published: October 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading